உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டாஸ்மாக்கில் மெகா ஊழல்: ஸ்டாலின், செந்திலை தாக்கும் டிடிவி TTV dinakaran ammk protest bjp protest

டாஸ்மாக்கில் மெகா ஊழல்: ஸ்டாலின், செந்திலை தாக்கும் டிடிவி TTV dinakaran ammk protest bjp protest

டாஸ்மாக் மதுக்கடைகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, சமீபத்தில் சென்னையிலுள்ள டாஸ்மாக் தலைமையகம் மற்றும் மதுபான ஆலை நிறுவனங்கள், தொடர்புடைய 25 இடங்களில் ரெய்டு நடத்தியது. இந்தச் சோதனையில் 1000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி பாஜ தீவிரமாக போராடி வருகிறது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை கடந்த 17 ம்தேதி முற்றுகையிட முயன்ற பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டும் நூதன போராட்டத்தில் பாஜவினர் ஈடுபட்டு வருகின்றனர். . பாஜவினரின் போராட்டத்தை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போட டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து உத்தரவு பறந்துள்ளது. இதற்கிடையில், பா.ஜவுக்கு போட்டியாக தி.மு.கவினரும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். சங்கிகள் கவனத்துக்கு... இக்கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதில்லை என, அச்சிடப்பட்ட போஸ்டர்களை டாஸ்மாக் கடை முன் ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டரில் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்ளும் படமும் இடம்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், டில்லியை போலவே, மதுபான ஊழல் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. இதனிடையே, அண்ணாமலையின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், திமுக அரசுக்கு எதிரான பாஜ போராட்டத்தில் அமமுகவும் கைகோர்க்கும் என டிடிவி தினகரன் சொன்னார்.

மார் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி