உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காலத்தால் அழியாத ஞானம் தருவது பகவத் கீதை UNESCO | World memory Register | Gita | Modi

காலத்தால் அழியாத ஞானம் தருவது பகவத் கீதை UNESCO | World memory Register | Gita | Modi

யுனெஸ்கோ நினைவு பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் பிரதமர் மோடி பெருமிதம் ஐ.நா. சபையின் கலை, இலக்கிய, கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில், பாரம்பரிய முக்கியத்துவம் உள்ள கலை, இலக்கிய கலாச்சார அடையாளங்களை தன்னுடைய சர்வதேச நினைவு பதிவேட்டில் The Memory of the World (MoW) Register பதிவு செய்து வருகிறது. கடந்த ஆண்டு ராம்சரித்மனாஸ், பஞ்சதந்திரம், சஹ்ருதயலோக-லோகனா ஆகிய பண்டைய இந்திய வரலாற்று இலக்கிய படைப்புகள் இந்த பதிவேட்டில் இடம் பெற்றன. இந்தாண்டு பல்வேறு நாடுகளின் 74 கலை, கலாசார படைப்புகள், அடையாளங்கள், சர்வதேச நினைவு பதிவேட்டில் பதிவு செய்திருப்பதாக யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது. அதில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையும், பரத முனிவர் இயற்றிய நாட்டிய சாஸ்திரமும் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்திய படைப்புகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியர்களுக்கு பெருமிதம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில் கீதையும், நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது உலகம் முழுக்க வாழும் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது. காலத்தால் அழிக்க முடியாத ஞானமும், வளமான கலாச்சாரமும் கொண்ட நமது உயரிய பாரம்பரியங்களுக்கு இதன்மூலம் சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கீதையும், நாட்டிய சாஸ்திரமும் பல நூறாண்டுகளாக நமது நாகரிகத்தையும், உணர்வுகளையும் வளர்த்து வருகின்றன என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

ஏப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை