உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நிருபரால் டிரம்ப் டென்ஷன்: வெள்ளை மாளிகையில் பரபரப்பு | US donald Trump | vladimir putin | PM Modi

நிருபரால் டிரம்ப் டென்ஷன்: வெள்ளை மாளிகையில் பரபரப்பு | US donald Trump | vladimir putin | PM Modi

இந்தியாவுக்கு 25% அபராத வரி போட்டது நடவடிக்கை இல்லையா? கேள்வி கேட்ட நிருபரை வறுத்தெடுத்த டிரம்ப் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறி, அமெரிக்காவுக்கு வரும் இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரியை விதித்தார், அதிபர் டிரம்ப். பிறகு, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு 25 சதவீத அபராத வரியையும் டிரம்ப் விதித்தார். இப்படி திடீரென 50 சதவீத வரியை டிரம்ப் விதித்ததால், இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். ஆனாலும், அமெரிக்காவின் நெருக்கடிக்கு அஞ்ச மாட்டோம் என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார். அமெரிக்காவுக்கு மாற்றாக புதிய நாடுகளுக்கு இந்திய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வரும் நிலையில், இந்தியாவுக்கு இன்னொரு அதிர்ச்சி செய்தி வந்து சேர்ந்துள்ளது. அதிபர் டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பேட்டியளித்தார்.

செப் 04, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

krishna
செப் 04, 2025 18:29

doesn't have the courage to take action against Russia and China. and putting taxes on India. put taxes on Russia. first of all you should put taxes on china, european countries. if u put tax on china they won't give the magnets, that's why u didn't put the tax on china. your strategy was wrong and USA will fail USD will fall if BRICS currency comes up..we will be strong. Jai hind


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை