வாசகர்கள் கருத்துகள் ( 2 )
0 + 0 = 0
இனம் இனத்தோடதானே சேரும். .. கூட்டணி வச்சுப்பாரு... அப்பறம் காகா கூட உன் வீட்டுப்பக்கம் வராது ... ஹிஹிஹி
காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் நடந்த ஆலோசனை! | Vijay | TVK | Congress | Rahul
இதுவரை எந்த கட்சியும் தவெகவை கூட்டணிக்காக நேரடியாக அணுகவில்லை. அதிமுக தரப்பில் கூட்டணி முயற்சி மேற்கொண்டாலும், தன் தலைமையில் தான் கூட்டணி, பாஜவுக்கு அதில் இடமில்லை என விஜய் உறுதியாக இருந்ததால் அந்த முயற்சி பாதியில் நின்றது. இதையடுத்து விசிகவை இழுக்க, விஜய் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. அக்கட்சி பிடிகொடுக்காமல் நழுவி வருகிறது. அடுத்ததாக காங்கிரஸ் உடன் கூட்டணி சேர தவெக திட்டமிடுகிறது. இதற்கு தமிழக காங்கிரசில் உள்ள திமுக எதிர்ப்பு தலைவர்கள் சிலர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். தொழில் வளம் மிகுந்த தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ள அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரை எழும்பூர் தொகுதிக்கு மாற திமுக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது. மீண்டும் அவர் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என திமுக தேர்தல் வியூக வகுப்பு நிறுவனம் தந்த ஆலோசனைப்படி அந்த எம்எல்ஏவிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிருப்தியில் உள்ள அவரை சென்னையில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் விஜய் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவிடம், விஜய் சில நிமிடங்கள் போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தவெக வட்டாரத்தில் கூறப்படுவதாவது: தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால் ஆதாயத்திற்காக திமுகவுடன் 10 சீட்டுக்கும், 20 சீட்டுக்கும் காங்கிரஸ் கூட்டணி அமைக்கிறது. தவெகவுடன் கூட்டணி அமைத்தால் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைக்கலாம். தவெகவும், காமராஜரை கொள்கை தலைவராக அறிவித்துள்ளது. இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்தால் மற்ற கட்சிகளும் தேடி வரும். இந்த தகவல்களை எல்லாம் ராகுலிடம் எடுத்துக்கூறுமாறு கார்கேவிடம் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். விரைவில் ராகுல் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக அவரும் விஜயிடம் உறுதி அளித்துள்ளார். மதுரையில் தவெக இரண்டாவது மாநில மாநாடு நடப்பதற்குள் இந்த சந்திப்பு நடக்கலாம் என தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.
0 + 0 = 0
இனம் இனத்தோடதானே சேரும். .. கூட்டணி வச்சுப்பாரு... அப்பறம் காகா கூட உன் வீட்டுப்பக்கம் வராது ... ஹிஹிஹி