உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / சதுரங்கப்பட்டினம் சம்பவம்: அண்ணாமலை கண்டனம் | annamalai condemned dmk govermen

சதுரங்கப்பட்டினம் சம்பவம்: அண்ணாமலை கண்டனம் | annamalai condemned dmk govermen

கல்பாக்கம் அடுத்த வாயலுாரைச் சேர்ந்த துரைராஜ் சுஜாதா தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு 2வது முறையாக கருவுற்ற சுஜாதா, சதுரங்கப்பட்டினத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 9ம் தேதி இரவு, பிரசவத்துக்காக அட்மிட் செய்யப்பட்டார். டாக்டர்கள் இல்லாத நிலையில், செவிலியர்கள், உதவியாளர் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, சுஜாதாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பிரசவம் நடந்தது. பெண் குழந்தை இறந்தே பிறந்தது. நேற்று காலை சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு கணவர் துரைராஜ் மற்றும் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளும் போலீசாரும் பேச்சு வார்த்தை நடத்தி, பிரசவத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துரைராஜ் வலியுறுத்தினார்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ