உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் | Amstrong| BSP| amstrong case charge sheet

5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் | Amstrong| BSP| amstrong case charge sheet

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். எஞ்சியவர்களில் 25 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செம்பியம் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். கிட்டத்தட்ட 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 30 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியாக சிறையில் இருக்கும் நாகேந்திரன் சேர்க்கப்பட்டுள்ளார். 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்பவ செந்தில், 3வதாக நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் சேர்க்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிறையில் இருந்து நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டதாகவும், அதை வெளியில் இருந்து அவரது மகன் அஸ்வத்தாமன் செயல்படுத்தியதாகவும், அதற்கு சம்பவ செந்தில் பணம் உட்பட பிற உதவிகள் செய்ததாக கூறப்படுகிறது.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை