சென்னையில் அதிகாலை நடந்த அதிர்ச்சி சம்பவம் | Chennai | School Students | Arrest
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சிறுவன் அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி விடுமுறை என்பதால் வீடு வீடாக தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்கிறான். வழக்கம் போல இன்று அதிகாலை கேன்களை இறக்கி வைக்கும் பணியில் இருந்துள்ளான். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் சிறுவனை சுற்றிவளைத்து தாக்கி உள்ளது. கத்தி, அரிவாள் கொண்டு தாக்கப்பட்டதில் உடல் முழுவதும் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. சிறுவன் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்தான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் சிறுவனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சிறுவனை வெட்டிய கும்பல் அவனது நண்பர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவிடுவதில் ஏற்பட்ட போட்டியே இந்த தாக்குதலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.