உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கோவை வீடுகளில் வேட்டையாடிய மர்ம கும்பல் | CCTV | Coimbatore Theft

கோவை வீடுகளில் வேட்டையாடிய மர்ம கும்பல் | CCTV | Coimbatore Theft

கோவையில் தீபாவளி விடுமுறைக்கு வெளியூர் சென்றவர்களின் வீடுகளை குறி வைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. குறிப்பாக வசதியானவர்கள் வசிக்கும் ஏரியாக்கள் நோட்மிடப்பட்டு தொடர்ச்சியாக யாரும் இல்லாத வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது. கோவை பீளமேடு லட்சுமி நகரில் ஆனந்த ராம் என்பவரது வீட்டில் 35 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளது. ஆனந்த் ராம் கட்டுமான தொழில் செய்து வருகிறார். பெங்களூருவில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்ற நேரத்தில் கொள்ளை நடந்துள்ளது. வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஞாயிறன்று அதிகாலையில் ஐந்து ஆசாமிகள் வீட்டில் காம்பவுண்ட் கேட் ஏறி குதித்து உள்ளே சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பீளமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆசாமிகள் ஐந்து பேரும் டிரவுசர் அணிந்து முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு வந்திருப்பது தெளிவாக தெரிகிறது. அவர்கள் லட்சுமி நகர் பகுதியில் நடந்து செல்லும் காட்சிகள் அருகே இருந்த கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து பீளமேடு போலீசார் கொள்ளை கும்பலை தேடுகின்றனர்.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ