கழுத்தில் பாம்புடன் டாஸ்மாக் வந்த இளைஞர் | Snake | TASMAC
தர்மபுரியில் நால்ரோடு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. ராஜபேட்டையே சேர்ந்த சூர்யா என்பவர் மது வாங்க வந்தார். ஏற்கனவே போதையில் இருந்த அவர் தள்ளாடியபடி நின்றார். உயிருடன் நெளியும் பாம்பு அவரது கழுத்தில் இருந்தது. துண்டு எடுத்து தோளில் போடுவது போல லாவகமாக மடித்து போட்டார். இதனை கண்ட சக மதுபிரியர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினர். பின்னர் சிங்கிளாக சென்று மது வாங்கினார் சூர்யா. கையில் ஊற்றி கொஞ்சம் பாம்புக்கும் கொடுத்தார். போதையில் நடுரோட்டிற்கு சென்று அலப்பறை செய்தார். பாம்பை கண்டதும் பொதுமக்கள் பயந்து ஓடினர். தகவல் அறிந்து வந்த போலீசார் சூர்யாவை தடுத்தனர். பிரச்சனை செய்யாமல் வீட்டுக்கு போக சொல்லி எச்சரித்தனர். அதன் பிறகு கொஞ்சம் அடங்கி அவர் கிளம்பி சென்றார். அங்கிருந்தவர்கள் நிம்மதி பொருமூச்சு விட்டனர்.