ஸ்ரீவைகுண்டம் மாணவனை ஜாதி ரீதியாக சரித்த சம்பவத்தில் பகீர் Devendra Raj case | srivaikuntam bus case
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஜாதி ரீதியான மோதலில் ஆதிதிராவிட மாணவன் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரியநாயகபுரத்தை சேர்ந்த மாணவன் தேவேந்திரராஜ், பாளையங்கோட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். 2 நாள் முன்பு பப்ளிக் தேர்வு எழுத பஸ்சில் சென்று கொண்டிருந்தார். கெட்டியம்மாள்புரம் என்ற இடத்தில் பஸ்சை வழிமறித்த ஒரு கும்பல், தேவேந்திரராஜை வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பலத்த காயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தேவேந்திரராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். வெட்டு பட்ட மாணவன் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். ஜாதி ரீதியாக மாணவனை கொலை வெறியுடன் வெட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.