உடைக்கப்பட்ட டாஸ்மாக் ரகசியம்: நடந்தது என்ன? | TASMAC | Erode
ஈரோடு வெட்டுக்காட்டுவலசை சேர்ந்தவர் தங்கவேல். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவ்வப்போது மது அருந்துவது வழக்கம். சில நாட்களுக்கு முன் வீட்டுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கி இருக்கிறார். டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளனர். அதனை ஆன்லைன் பணம் செலுத்தும் முறை மூலமாக அனுப்ப சொல்லி இருக்கின்றனர். 250 ரூபாய் மது பாட்டிலுக்கு 260 ரூபாய் கொடுத்து தங்கவேல் வாங்கி வந்துள்ளார். இது குறித்து பணம் அனுப்பிய ஆதாரத்துடன் ஈரோடு கலெக்டர் ஆபீஸில் புகார் கொடுத்துள்ளார்.
நவ 26, 2024