செய்தி சுருக்கம் | 08 PM | 30-09-2024 | Short News Round Up | Dinamalar
துணை முதல்வர் உதயநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, திமுகவினர் என்னை நேரில் சந்தித்து வாழ்த்த சென்னைக்கு வருகிறார்கள். அவர்களது அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன். நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்கு வருவதை தவிர்க்குமாறு அன்போடும் உரிமையோடும் திமுகவினரை கேட்டுக் கொள்கிறேன் என உதயநிதி கூறியுள்ளார். கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடை அருகில் சென்ற பெண் என் அண்ணன் சொத்தை விற்று விஜய் மக்கள் இயக்கத்தை வளர்த்தார். ஆனால் அவரை இன்னைக்கு ஒதுக்கி வச்சிடீங்களேனு ஆதங்கத்தை கொட்டினார்.