உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 26-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 26-01-2025 | Short News Round Up | Dinamalar

76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது குடியரசு தின விழா கொண்டாடும் இந்தியர்களுக்கு அமெரிக்கா சார்பில் வாழ்த்துகள். இந்தியர்கள் அரசியல் அமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூறும் இந்த நாளில், அந்நாட்டு மக்களின் கொண்டாட்டங்களுடன் இணைகிறோம். நம் இரு நாடுகளின் கூட்டு பங்களிப்புகள் தொடர்ந்து புதிய உயரங்களை தொடும். அது 21ம் நூற்றாண்டின் உறவுகளை வரையறுக்கும். இரு நாட்டு மக்களுக்கு இடையே நீடித்திருக்கும் நட்புதான் நமது ஒத்துழைப்பின் அடித்தளம். நமது பொருளாதார உறவுகள் நம் இரு நாடுகளையும் முன்னோக்கி இட்டுச் செல்கிறது. இந்தோ பசிபிக் பிரதேசத்தை மேம்படுத்த குவாட் நாடுகளை ஒருங்கிணைப்பது, விண்வெளி ஆய்வில் நமது கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பது உள்பட பல்வேறு துறைகளில் நமது ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவோம் என மார்கோ ரூபியோ கூறி உள்ளார்.

ஜன 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை