தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 SEP 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் அனுரகுமார திசாயநாயகவுக்கு அனுப்பி வைத்தார். ஹிந்து தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியுள்ளது. பாரதம், ஹிந்து தர்மம் இரண்டையும் பிரிக்க முடியாது. நமது தர்மம் என்றுமே அழிக்க முடியாதது. அதனை பலவீனப்படுத்த முயற்சிகள் நடக்கிறது. ஆனால் அதில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என கவர்னர் ரவி கூறினார். சனாதன தர்மம் என்பது எளிமையானது. ஆனால் வெளியே தெரியும்போது சிக்கலானதாக தெரிகிறது. ஏனென்றால் பல கடவுள்களை வழிபடுகிறோம். இதை பயன்படுத்தி குழப்பத்தை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். இலங்கை அதிபராக அநுர குமார திசநாயகே இன்று அதிபராக பதவியேற்றார். இவர் இலங்கையின் 9வது அதிபர். இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்து முடிந்தது. இலங்கையில் 2022ல் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது, மக்கள் போராட்டத்தை அநுர குமார திசநாயகே முன்னெடுத்தார். இவருக்கு தமிழர்கள் வசிக்கும் பகுதியிலும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.