உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ்  | 03 NOV 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar 

தினமலர் எக்ஸ்பிரஸ்  | 03 NOV 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar 

#Dinamalar #Expressnews #todayheadlines  #tamilnadunews #tamilnaduheadlines  #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin வடக்கு காசாவில் ஷேக் ரத்வான் ஆரம்ப சுகாதார நல மையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அங்குள்ள கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர். தெலுங்கு நடிகர் பிரபாஸ், தற்போது தி ராஜாசாப், ஸ்பிரிட், சலார் 2, கல்கி 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். அவரது அடுத்த படங்களை இயக்க மூன்று மொழிகளில் இருந்து முக்கிய இயக்குனர்களை தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளார். அதன்படி, தெலுங்கில் ஹனுமான் படத்தினை இயக்கிய பிரசாந்த் வர்மா, தமிழில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஹிந்தியில் ராஜ்குமார் ஹிராணி ஆகியோர் இயக்கத்தில் உருவாகும் பான் இந்தியா படங்களில் பிரபாஸ் நடிக்கவுள்ளார்.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை