மாவட்ட செய்திகள் | 20-10-2024 | District News | Dinamalar
நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் அரசு டாஸ்மாக் மது கடை உள்ளது. நேற்றிரவு 10 மணிக்கு கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். காலையில் வந்த பார்த்த போது கடையின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலப்பாளையம் போலீசில் டாஸ்மாக் மேலாளர் ஜான் புகார் கூறினர். போலீஸ் சோதனையில் இரும்பை வெட்டும் கட்டிங் மெஷின் மூலம் கடையின் பூட்டு மற்றும் கதவை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. கடைக்குள் சென்ற கொள்ளையர்கள் பணம் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டியை உடைக்க முயற்சி செய்து முடியவில்லை. இதனால் பெட்டியில் இருந்த 3 லட்சம் ரூபாய் தப்பியது. சோர்ந்து போன கொள்ளையர்கள் கடையில் ஹாயாக அமர்ந்து மது குடித்தனர். செல்லும் போது ஒரு லட்சம் மதிப்புள்ள 10 மதுபாட்டில் பெட்டிகளை துாக்கி சென்றனர்.