/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ மாவட்ட செய்திகள் 4 மணி | 23-12-2024 | District News | Dinamalar
மாவட்ட செய்திகள் 4 மணி | 23-12-2024 | District News | Dinamalar
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த நான்கு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் சுற்றுலா வாகனம் மூலம் ஊட்டி வந்தனர். ஊட்டியில் தங்கிய அவர்கள் இன்று காலை ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக டெம்போ டிராவல்ஸ் வாகன மூலம் கூடலூர் நோக்கி சென்றனர். கூடலூர் ஹெல்த்கேம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ராஜு மற்றும் சுற்றுலா பயணிகள் 12 பேர் காயமடைந்தனர். அவர்களை போலீசார் மற்றும் வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
டிச 23, 2024