உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 28-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 28-10-2024 | Short News Round Up | Dinamalar

மேற்கு வங்கத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். மேற்கு வங்கத்தில் ரவீந்தரநாத்தின் தேசிய கீதம் கேட்பதற்கு பதிலாக குண்டுகளின் சத்தம் கேட்கிறது. மாநில அரசின் ஆதரவுடன் வெளிநாட்டவர்களின் ஊடுருவல் நடந்திருக்கிறது. இதைத் தடுக்க ஒரே வழி 2026ல் நடைபெறும் சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதாவை தேர்வு செய்வதுதான். கடந்த லோக் சபா தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு இடங்கள் குறைந்தன. அதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், மறந்துவிடாதீர்கள். நாங்கள் இரண்டு எம்.பி.யாக இருந்தோம். அப்போதே 370-வது பிரிவை நீக்குவதை நோக்கமாக கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட வைராக்கியமான கட்சி பாரதிய ஜனதா. வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு மெஜராட்டி பெற்று மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா கூறினார்.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ