செய்தி சுருக்கம் | 08 PM | 25-10-2024 | Short News Round Up | Dinamalar
#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp #Dinamalar #modi #annamalai சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் 2வது தளத்தில் இருந்த ஆய்வகத்தில் இருந்து இன்று காலை 10 மணி அளவில் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 12.30 மணி அளவில் வாயுக்கசிவு அதிகமான நிலையில் 3வது தளத்தில் இருந்த 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூச்சுத்திணறலால் மயங்கி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அவசர கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து, மாணவர்களை திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த பெற்றோர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்ல பள்ளி முன் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் பள்ளி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது. இதையடுத்து முதலில் இருந்து மீண்டும் பாடியுள்ளனர். ஆனால் இரண்டாம் முறை பாடப்பட்டபோதும் தவறாகவே பாடியுள்ளனர். மொத்தத்தில் நிகழ்ச்சியில் சரியான முறையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்டது. ஆனாலும் கூட, அதை வைத்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் திமுகவினர் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்தனர் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டதற்காக அவர் மீது இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்து, பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் முதல்வர் ஸ்டாலின். மத்திய அரசு கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.