உள்ளூர் செய்திகள்

ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை

தனியார் பள்ளிகளைப் போல் வாரம் ஒருநாள் 'ஹவுஸ் யூனிபார்ம்' எனும் சீருடையை நடைமுறைப்படுத்தும் இது, போதிமரத்தை தன் இலச்சினையாகக் கொண்டிருக்கும் தஞ்சாவூர், அம்மா பேட்டை ஒன்றிய அன்னப்பன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி பள்ளி: உயர்நிலைப் பள்ளியாக 2011ல் தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில், மாணவர்களின் தன்னம்பிக்கை பெருக்கும் கலையரங்கம் இருக்கிறது. தலைமைப் பண்பு வளர்க்கும் மாதாந்திர வகுப்பு தலைவர்கள் கூட்டம்; 'டீ வித் டீச்சர்' எனும் ஆங்கில கலந்துரையாடல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இங்கு, 205 மாணவர்கள் திருப்தியோடு பயில்கின்றனர். பெருமை: 'சமீபத்திய மண்டல விளையாட்டு போட்டியில், 17 வயதிற்கு உட்பட்டோர் குண்டு எறிதலில் எனக்கு 3ம் இடம்; 'த்ரோபால்' அணியில் நான் கீ பிளேயர்; கடந்த தீபாவளியன்று அம்மாவிற்கு நான் புடவை பரிசளித்து அவர் ஆனந்த கண்ணீர் விட காரணமாக இருந்தது, என் பள்ளி எனக்குள் வளர்த்த சிறுசேமிப்பு பழக்கம்!' இ.வைஷ்ணவி, 9ம் வகுப்பு கோரிக்கை: 'நிரந்தர மைதானம் இல்லாத பள்ளி; அதனால் என்ன... கிடைத்த நிலத்தில் வில்வித்தை, ஈட்டி எறிதல், இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் சிறப்பு பயிற்சி த ரு கிறோம். கலையரங்கம் அருகில் ததும்பும் குளம் மட்டும் பயமுறுத்துகிறது; சுற்றுச்சுவர் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்!' த.வெங்கடாஜலபதி, தலைமை ஆசிரியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !