உள்ளூர் செய்திகள்

ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை

அமைச்சரே... 15 க்கு 11 போதவில்லை திருப்பூர், அவிநாசியில் 1953ல் இது இருபாலர் பள்ளி; 1997ல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி; 2013ல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி; இங்கு பயிலும் 935 மாணவியரில் பெரும்பாலானோர் கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள்! பள்ளி: சமூக வலைதள மோகத்தால் 2022ம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 77 சதவீதமும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97 சதவீதமும் தேர்ச்சி கண்ட இப்பள்ளி, ஆசிரியை புனிதவதி தலைமையிலான ஆசிரியர் குழுவின் மீட்பு முயற்சியால், 2025 - 26ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முறையே 95, 98 சதவீத தேர்ச்சி எனும் பெரும் உயரம் தொட்டது! பெருமை: 'வட்டு எறிதல், குண்டு எறிதலில் என்னை மிளிர வைத்தது இப்பள்ளி. இங்கு கிடைத்த அன்றாட பயிற்சியால், 'முதல்வர் கோப்பை - 2025' போட்டியில் இரு விளையாட்டிலும் மாவட்ட அளவில் பதக்கங்கள் வென்றேன். இப்போது எனது வலுதுாக்கும் திறனை கூர்தீட்டி வருகிறேன்!'தி.மைதிலிபிரியா, பிளஸ் 1 மாணவி கோரிக்கை: 'பிளஸ் 1 வகுப்பில் 'கணிதம், உயிரியல்' பாடப்பிரிவு ஆங்கில வழியில் இல்லாததால், பல மாணவியர் பள்ளி மாறி விடுகின்றனர்; ஏழு பாடப் பிரிவுகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவியருக்கு 15 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் 11 வகுப்பறைகளே உள்ளன; இவ்விரு குறைகள் தீர்ந்தால் பள்ளியின் தரம் இன்னும் பன்மடங்கு உயரும்!' கி.முத்துக்குமரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !