உள்ளூர் செய்திகள்

பிளாஸ்ட்

சிங்கப் பெண்ணே... சிங்கப் பெண்ணே...'பக்கத்து வீட்டுப் பையன் அடித்து விட்டான்' என அழுதபடி அம்மாவிடம் புகார் சொல்லவரும் மகளை, 'சிங்கப் பெண்' ஆக மாற்றுகிறார் 'கராத்தே' மாஸ்டரான அப்பா. தற்காப்பு கலையில் தேறும் மகள் பெரிய பிரச்னை ஒன்றில் சிக்க அவளை மீட்க எளிய குடும்பம் ஆடும் 'கராத்தே' ஆட்டம்! ஆட்சி மாறினும் காட்சி மாறாமல், பெண் சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் பெருகிவரும் சூழலில், 'பெண்கள் தற் காப்பு கலை பயில்வது அவசியம்' என வலியுறுத்திய விதத்தில் நம் மனதில் தனக்கான இடத்தை 'ரிசர்வ்' செய்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ். 'பவர் பஞ்ச், பிரண்ட் கிக்' என 'கம்பேக்' கொடுத்து, சண்டை பிரியர்களுக்கு விருந்து படைத்துள்ளார் 'ஆக் ஷன் கிங்' அர்ஜூன். அதிரடி காட்சிகளில் தெறிக்கும் அவரது எனர்ஜி, 'அர்ஜூனுக்கு வயதென்பது, வெறும் எண்கள் மட்டுமே' என்கிறது. ப்ரீத்தி முகுந்தனும், அபிராமியும் அர்ஜூனுக்கு 'டப்' கொடுத்திருக்கின்றனர்! பெண்களை அவர்களின் இயல்பான ரவுத்திரத்துடன் ரவுடிகளை பந்தாட வைத்திருக்கும் 'பீனிக்ஸ்' பிரபுவின் சண்டை காட்சிகள் அமர்க்களம்; படம் நிறைத்திருக்கும் சண்டை காட்சிகளில் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவும், ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும் 'நீயா நானா' என போட்டி போட்டு வென்றிருக்கின்றன! 'ஈவு இரக்கமற்ற ரவுடிகளை எதிர்கொள்ளும் ஒரு குடும்பம் சந்திக்கும் பிரச்னை' என்ற நுாலில், தொய்வில்லாது திரைக்கதை பின்னி இருக்கிறார் 'சினிமா வித்தை' அறிந்த இயக்குனர்; சீறிப்பாயும் அவரது பைக்கின் பின் இருக்கையில் நாம் பயணிப்பது போல் இரண்டரை மணி நேரமும் செம விறு விறு! ரமணா காலத்து புலனாய்வு முறைகளை கையாளும் போலீஸ், எந்த ரவுடியையும் 'கராத்தே' வெட்டில் சாய்த்து புதைக்கும் குடும்பம்... இவற்றை நம்பும் மனதிருப்பின் இது சூப்பர் படம். ஆக....'சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் எப்படி செயல்பட வேண்டும்' என்று பாடம் நடத்தியிருக்கிறது படம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !