மிஸ்டர் மூளைக்காரன் c/o தமிழ்நாடு
'அடேய்ய்ய்... கோழி எப்படி இருந்தாலும் குழம்பு ருசியா இருக்குதாங்கிறது தான் நமக்கு முக்கியம்'ன்னு 'ஆல் இன் ஆல்' அழகுராஜ் சொன்னதுமே...ஏண்ணே... 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே...'ன்னு மேடைக்கு மேடை முதல்வரோட முன் பெயரை விரிச்சு சொல்லி நரம்பு புடைக்க பேசுற நடிகர் விஜய், கட்சி தலைவரா தேர்தல் ஆணையத்துல பதிவு செஞ்சு வைச்சிருக்கிற 'ஜோசப் விஜய்'ங்கிற தன்னோட முழு பெயரை எந்த மேடையிலேயும் சொல்ல மாட்டேங்குறாரே... அதைத்தானேண்ணே இப்போ எனக்கு ஞாபகப்படுத்துறீங்க?அடங்கப்பா... டேய் மண்டையா... நீயா பேசுறே?ஹி... ஹி... ஆமாண்ணே... நானேதான்! ஏன்ணே... 'இது பகுத்தறிவு மண்ணுன்னு ஓயாம உருட்டிட்டு இருந்தானுங்களே... ஒரு நடிகர் கூப்பிட்டதும் ஓடி வந்து சாலையை அடைச்சு நின்னு, 'அப்படித்தான்டா வண்டியை மறிப்போம்'னு மக்களை மிரட்டி, சாலை தடுப்புகளை உடைச்சு, வெயில்ல மயக்கம் போட்டு உருண்ட இவனுங்களை உருவாக்குன மண்ணு... பகுத்தறிவு மண்ணா'ன்னு என்னை யோசிக்க வைக்கிறீங்க; சரிதானேண்ணே?டேய் பக்கெட் வாயா... என்னால நம்பவே முடியலைடா; நீ எப்படிடா இப்படி?எல்லாம் நீங்க தந்த ஞானம்தாண்ணே! அய்யோ... அய்யோ... நெஞ்சை ரொம்ப நக்குறானே; சரிடா தீவட்டி தலையா... '1,000 ரூபாய் வாங்குறீங்கள்ல; பேருந்துல இலவசமாத்தானே போறீங்க'ன்னு உன் வீட்டுக்கு வந்து கேட்டப்போ, 'ஆமா'ன்னு சொல்லத் தெரிஞ்ச உனக்கும், உன் பொண்டாட்டிக்கும், 'தமிழகம் நிதி நெருக்கடியில் இருக்கிறதா'ன்னு உயர் நீதிமன்றம் அரசுகிட்டே கேட்டதை, வந்து நின்ன உடன்பிறப்புகள்கிட்டே கேட்கணும்னு ஏன்டா தோணலை?அண்ணே... நீங்க அறிவுக் கொழுந்துண்ணே!டேய்... இந்த டகால்டி வேலையெல்லாம் வேணாம்; கேட்டதுக்கு பதில் சொல்லு! அண்ணே... அரசாங்கம் நிதி நெருக்கடியில இருந்தா நமக்கென்ன... இல்லேன்னா நமக்கென்ன; நமக்கு 1,000 ரூபாதானேண்ணே முக்கியம்! ம்க்க்க்கும்... வெளங்கிரும்; மக்களே... நான் சொல்லலை... பய மூளைக்காரன்.