உள்ளூர் செய்திகள்

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

சரிண்ணே... என்கிட்டே ஏதாவது கேள்வி கேளுங்க! ஓ... நான் கேட்டா நீ சொல்லிருவே... சரிடா... 'தமிழக மக்களுக்கு மறதி ஜாஸ்தி'ன்னு நவம்பர் மாசம் அழுத்தமா சொல்லிட்டு, 'ஈ.வெ.ரா., என்ன எண்ணினாரோ, என்ன உடுத்தினாரோ அந்த கறுப்பு வண்ண உடையில் உதயநிதி தன் பிறந்தநாள் கொண்டாடியதைப் பார்த்து, 'இளம் ஈ.வெ.ரா.,' என்றே அவரை உணர்ந்தேன்'னு இப்போ சொன்னாருல்ல... அந்த அமைச்சர் பேரென்ன? அண்ணே... ஒரு 'க்ளூ' கொடுங்கண்ணே... அட கிரகம் புடிச்சவனே... இதுக்கு 'க்ளூ'வா; சரி சொல்றேன்... அவரு பேரு 'வே'ங்கிற எழுத்துல ஆரம்பிச்சு, 'லு'ங்கிற எழுத்துல முடிஞ்சிரும்; நடுவுல வேற எழுத்தே வராது! போங்கண்ணே... 'க்ளூ'வும் கஷ்டமா இருக்கு; நம்ம 'வாழைப்பழ கணக்கு' மாதிரி ஈசியா ஏதாவது... த்துா... மனுஷனாடா நீ; சரி... இதான் கடைசி... நல்லா கவனி; 'தமிழ்நாட்டில் தமிழனின் நிலைமை துக்ககரமாக இருப்பதை எதிரொலிக்கும் விதமாக கறுப்பு சட்டை அணிகிறோம்'னு 1946ல் சொன்னது யாரு? இது ரொம்ப ஈசிண்ணே; அது, ஈ.வெ.ரா.,! பார்றா... சபாஷ்டா மண்டையா; இந்தா புடி... அந்த பழமான இந்த பழமும் உனக்குதான்! நன்றிண்ணே; ஏன்ணே... நான் உங்ககிட்டே ஒரு கேள்வி... ஓ... அந்தளவுக்கு நீ வளர்ந்துட்டியா... கேளு! 'ஹிந்து ஆண்களை குறிவைச்ச பஹல்காம் தீவிரவாத தாக்குதலை எதிர்க்கும் முயற்சியில் இறந்தார்'னு சொல்லப்படுற அந்த குதிரை ஓட்டிக்கும், இப்போ ஆஸ்திரேலியாவுல யூதர்களுக்கு குறிவைச்ச தீவிரவாதியை நைஸா போய் பிடிச்சவருக்கும் ஒரு 'மதிப்பிற்குரிய ஒற்றுமை' இருக்கு; என்னன்னு சொல்லுங்க? ம்ம்ம்... ம்ம்ம்... ம்ஹும்... தெரியலையேடா! 'மதம்' பிடிக்காத மண்ணு மனசுண்ணே உங்களுக்கு; அதான், யார் எதை உருட்டுனாலும் நம்புறீங்க; நல்லா யோசிங்கண்ணே... எல்லாத்துக்கும் பதில் கிடைக்கும்; 'இந்த 'விடியல்' வெளிச்சம் வேணாம்... என் 'தீப' ஒ ளியே போதும்'னும் சொல்லத் தோணும்! அப்படீங்கறே... சரிடா... நான் 'டாஸ்மாக்' போயிட்டு வந்து யோசிக்கிறேன். டேய் நாதஸ்... 'அந்த பழம்தான் இந்த பழம்'னு நான் நம்பணும்னா, நீ ஒரு புத்திசாலின்னு எனக்கு நிரூபிக்கணும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !