மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா
1. 18 வயசுக்கு கீழே உள்ளவங்க... 2. இதயம் பலவீனமானவங்க... 3. பிரக்னென்ட் லேடீஸ்... இதை படிக்காதீங்க! மாடியில குமுதா தந்த காபியைவிட, குமுதா பேசின அரசியல் 'கும்'முன்னு இருந்துச்சு! 'நீ யோசிச்சுப் பார்த்தியா அகிலேஷ்... 'அரசியல்ல நான் ஒரு குழந்தை'ன்னு ஆரம்பத்துலேயே சொல்லி, களத்துல யானை மாதிரி இருந்த தி.மு.க.,வை தாறுமாறா திட்டி, 'குழந்தையை நாம திருப்பி திட்டுறதா'ன்னு தி.மு.க.,வை யோசிக்க வைச்சு, ப்ப்பா... புது முதல்வரோட அரசியல் தெறிக்குதுப்பா'ன்னு குமுதா சொல்ல... நான் காபியை உறிஞ்சுட்டு 'கம்'முன்னு இருந்திருக்கலாம்; ஆனா... 'ஆமா கும்ஸ்... எதிரி தன்னை ஒரு பொருட்டா நினைக்கலேன்னாலும், 'எதிரி'ன்னு தான் முடிவு பண்ணியிருந்த தி.மு.க., தலைவரை தேடிப் போய், அதை 'அரசியல் நாகரிகம்'னு அவரையும் ஊரையும் பேச வைச்சு, 'என்னைச் சந்தித்த முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்'னு தி.மு.க., தலைவரை சொல்ல வைச்சு... செம... செம! 'இது எல்லாத்தையும்விட, 'ஆலோசனை களுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி'ன்னு பதிவிடாம, 'தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய வாழ்த்துகளுக்கு நன்றி'ன்னு மட்டும் பதிவிட்டார் பாரு... வேற லெவல்!' நான் இப்படிச் சொன்னதும் குமுதா கண்ணு லேசா சிவந்துச்சு; 'துாசி விழுந்திருக்கும்'னு நான் நினைச்சுட்டேன்! 'ஏன் அகிலேஷ்... எந்த முன் அனுபவமும் இல்லாத ஒரு தலைவரும், அவரோட சகாக்களும் நல்லாட்சி தருவாங்கன்னு நம்புறியே... நாளைக்கு இவங்க ஆட்சியை நீ ஒப்பிட்டுப் பார்க்கப் போறதே முந்தைய ஆட்சிகளோடத் தானே; 'சரி'ன்னு இப்போ நீ நம்புறதை 'சரியில்லை'ன்னு நீ முடிவு பண்ணினதோட ஒப்பிட்டு, 'இதுதான் சரி'ன்னு முடிவுக்கு வர்றது சரியா? 'மய்ய' அளவுக்கு இறங்கின குமுதா இப்படி என் மண்டையை குழப்பினதும்... முதல்வர் விஜயோட அறிக்கை சொன்ன மாதிரி, 'கொளத்துார்ல வெற்றி வீச்சை பார்த்துமா இப்படி பேசுறே கும்ஸ்' ன்னு 'அரசியல் நாகரிகம்' பிழிஞ்சு நான் கேட்க, மாடி ஜன்னல் வழியா குமுதா யாருக்கோ சிக்னல் கொடுத்தா; இந்தா... 'சுமார் மூஞ்சி குமாரு' இப்போ என்னை பொளக்கப் போறான்.