உள்ளூர் செய்திகள்

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

தி.மு.க., நெய்யில் காங்கிரஸ் ஸ்வீட்'உங்க மனசுக்கு எந்த பிரச்னையும் இல்லை'ன்னு எதை வைச்சு சொல்றீங்க தெனாலி? அது ரொம்ப சிம்பிள் டாக்டர்; '2025, அக்டோபர் 7ம் தேதி பதிவு செய்யப்பட்டதா சொல்லப்படுற இந்த வீரமணி வழக்கு மேல, அப்போ ஏன் இந்தளவுக்கு சமூக ஊடகங்கள் அக்கறை காட்டலை; இந்த அக்டோபர் 6, இடைத்தேர்தலுக்கு அப்புறமும் இதே பரபரப்போட விசாரணை தொடருமா'ன்னு என் மனசு யோசிக்குதே! இதபாருங்க தெனாலி... இதை வைச்சு... ஒரு முடிவுக்கு வரமுடியாதுன்னு சொல்றீங்க... அதானே டாக்டர்; சரி... இதை கேளுங்க; சமீபத்துல, காலை உணவு திட்டத்தை நம்ம முதல்வர் விரிவுபடுத்தினது தொடர்பான ஒரு பேட்டியில, 'காலை உணவு திட்டம் நல்ல திட்டம்'னு வீட்டுல பாராட்டுறதா ஒரு மாணவி சொல்றா; அவகிட்டே, 'இந்த திட்டத்தை ஆரம்பிச்சது யாருன்னு ஊடகங்கள் ஏன் கேட்கலை'ன்னும் என்னால யோசிக்க முடியுதே! மிஸ்டர் தெனாலி... அரசியல்னா இப்படித்தான்; உங்களுக்கு 1952ல்... தெரியும் டாக்டர்; சுதந்திரத்திற்கு அப்புறம் 1952ல் நடந்த முதல் தமிழக சட்டசபை தேர்தல்ல, தி.மு.க., போட்டியிடலை; போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு த.வெ.க., மாதிரியே பெரும்பான்மை இல்லை; அப்போ, பிற கட்சியில ஜெயிச்சவங்களை இழுத்து காங்கிரஸ் ஆட்சி அமைச்சது; தி.மு.க., ஆதரவோட ஜெயிச்ச 'காமன் வீல்' கட்சி தலைவர் மாணிக்கவேலருக்கு மந்திரி பதவியே கிடைச்சது; நான் எதையும் மறக்கலை டாக்டர்! ம்ம்ம்... பரவாயில்லையே; ஆமா... தெனாலிக்கு 'விசில்' ஊதுறது பிடிக்காதா? அய்யோ... எனக்கு 'விசில்' ரொம்ப பிடிக்கும் டாக்டர். ஆனா, 'ஓட்டை விழுந்திருக்குற தண்ணீர் பானையை சரிசெய்றேன்'னு சொல்லி, 'ஓட்டையை அடைக்குறவரை பானையை நிரப்பவிட மாட்டேன்'னு, என்னை தாகத்துல நிறுத்தி தன் ஆளுமையை நிரூபிக்க முயற்சி பண்ணினா, நான் 'விசில்' அடிக்க மாட்டேன்! ஆக... 'பானையில தண்ணீரை நிரப்பிக்கிட்டே ஓட்டையையும் அடைக்கிறதுதான் நிர்வாக திறமை'ன்னு சொல்றீங்க; அப்படித்தானே? சரியா சொன்னீங்க டாக்டர்! சரி... அது போகட்டும்; ஏன் அன்னைக்கு 'டிவி'யை உடைச்சீங்க? எந்த 'டிவி'யை டாக்டர்? பார்த்தீங்களா... சுத்தமா மறந்துட்டீங்க பாருங்க; நீங்க நார்மலா இல்லை தெனாலி... என்னை நம்புங்க; போங்க... போய் அப்படி உட்காருங்க... 'மாற்றம்'னு ஒரு 'பிசுபிசு' மருந்து எழுதி தர்றேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !