உள்ளூர் செய்திகள்

முதல்வரே... ஒரு நிமிஷம்!

வாழணும்னு ரொம்ப ஆசையா இருக்கு சார் செய்தி: தமிழகத்தை ஆளும் த.வெ.க., அரசு 717 'டாஸ்மாக்' கடைகளை மூடியிருக்கிறது! குரல்: நான் 'டாஸ்மாக்'கால் சீரழிந்தவன்; மதிப்புமிக்க என் வாழ்வை தொலைத்தவன்! முதல்வரே... சென்னை, பட்டாளம் பகுதியில் வசிக்கும் நான் 42 வயது வசந்த்; என் வாழ்வில் இதுவரை என்னவெல்லாம் எனக்கு கிடைத்திருக்க வேண்டுமோ, அதையெல்லாம் மது போதையால் அறவே இழந்து விட்டேன்! இந்த கொடிய பழக்கத் தால் மூளை நரம்பு பாதிப்பு, இடது கை செயலிழப்பு, இடது கால் பாதிப்பு, இடது கண் பார்வை கோளாறு... இப்படி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உயிர் இருந்தும் உயிரற்றவனாய் இருக்கிறேன். தாய், தந்தை, சகோதரி மரணித்த சூழலில் சகோதரன் உதவியோடு வாழ்ந்து வருகிறேன். ஒருவேளை தமிழகத்தி ல் 'டாஸ்மாக்' இல்லாமல் இருந்திருந்தால்... * காதலித்த பெண்ணையே மணம் முடித்து இருப்பேன் * நான்கு சுவர்களுக்குள் என் வாழ்க்கை முடங்கி இருக்காது * உழைத்து களைத்து நிம்மதியாய் உறங்கி இருப்பேன் அன்று மீன்பாடி வண்டி ஓட்டி, சுமை துாக்கி, கட்டட வேலை செய்து சம்பாதித்த பணத்தை எல்லாம் மது மயக்கத்தால் இழந்து விட்டேன். இன்று, 20 மாத்திரைகளோடு என் அன்றாடம் கழிகிறது. 'டாஸ்மாக்' அகற்றத் துவங்கி தமிழகத்திற்கு நம்பிக்கை தந்திருக்கும் மக்கள் முதல்வரே... மீண்டும் பழைய வாழ்க்கை வாழ ஆசைப் படுகிறேன். உயர் சிகிச்சை மூலம் என்னை மீட்டெடுத்து என் மிச்சத்தை நான் வாழ உதவுவீர்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !