உள்ளூர் செய்திகள்

முதல்வரே... ஒரு நிமிஷம்!

ஊனமாக்கிய அரசு பள்ளிசெய்தி: அரசு பள்ளி வளாகத்தில் இரும்பு குப்பை தொட்டியால் சிதைந்த மாண வியின் கை விரல்கள்! அநீதி: நிர்வாக அலட்சியத்திற்கு பொறுப்பு ஏற்காத அரசு பள்ளி தலைமை மற்றும் ஊராட்சி தலைமை! முதல்வரே... 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையாலும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தர முடியாத பிரச்னைகள் தமிழகத்தில் உண்டு' என்பதை அறிவீர்களா? விவசாய கூலிகளான நாங்கள் மகேந்திரன் - ஜெயலட்சுமி. கள்ளக்குறிச்சி, புதுப்பாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் எங்கள் மகள் சிரந்தணி, கடந்த ஜூன் 11ம் தேதி மதியம், பள்ளி வளாகத்தில் இருந்த இரும்பு குப்பை தொட்டிக்கு அருகில் தலைமை ஆசிரியர் உத்தரவின் பேரில் சென்றிருக்கிறாள். அப்போது எதிர்பாராவிதமாக தொட்டியின் மூடியில் அவளது இடதுகை நடுவிரல், மோதிர விரல் சிக்கி சிதைய, இன்று இரு விரல்கள் முழுமையாக இல்லை! அலட்சியமாய் செயலாற்றிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது நாங்கள் புகார் அளிக்க, சங்கராபுரம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எண்:295/2026) பதிவானது. உங்கள் தனிப் பிரிவில் அளித்த மனுவிற்கு, எண்: TN/ SCHOOL/KKI/I/PORTAL/12JUN26/17932470 வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு (எண்:4003/ 22/59/2026) பதிந்திருக்கிறது. ஆயினும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை! என் மகளின் விரல்களை செயற்கையாய் சீரமைக்க பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு உத்தரவிடுவீர்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !