வா வாசி யோசி...
எங்களை சிந்திக்க வைத்த சிகரங்கள் 'பாலியல் குற்றவாளிகளை பாலத்தின் கீழ் தலைவர் தொங்க விடுவார்' என இன்னும் நம்பும் கும்பலுக்கு மத்தியில், கோவை கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி மாணவர்களான இவர்கள் தனித்துவம் மிக்கவர்கள்; இவர்களின் வழிகாட்டிகள் யார்? 'இந்திய கணிதவியலாளர் ஆனந்த் குமார் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலை மாணவனாகும் வாய்ப்பை வறுமையால் இழந்தவர். வாழ்க்கை தந்த இப்பாடத்தால் ஏழை மாணவர்களுக்கு ஜே.இ.இ., பயிற்சியை இலவசமாய் அளித்து, 400க்கும் மேற்பட்டவர்கள் ஐ.ஐ.டி.,யில் பயில காரணமானார். என் வாழ்வின் விளக்கு ஆனந்த் குமார்!' ச.தினகர், கணினி அறிவியல் 'சிறந்த காபியை வழங்கி பத்தில் ஒன்றாக அல்லாமல், காபியுடன் சிறந்த அனுபவத்தையும் வழங்கிய தால்தான், சர்வதேச சந்தையில் 'ஸ்டார்பக்ஸ்' நிறுவனம் தனித்து நிற்கிறது. 'வழக்கமானது எனினும் அதிலொரு புதுமை புகுத்து' என்று போதித்த இதன் நிறுவனர்கள் ஜெர்ரி பால்ட்வின், ஜெவ் சீகல், கோர்டன் போக்கர் மூவரும் என் போதி மரங்கள்!' வ.ராகவ், இயந்திர மின்னணுவியல் 'மென்பொருள் பொறியாளர் இலக்குடன் இருந்த நான், அமெரிக்க 'டிவி' தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வி பற்றி அறிந்தேன். நிகழ்ச்சிகளை அவர் தொகுத்தளிக்கும் பாணி என்னுள் மறைந்திருந்த தொகுப் பாளரை கல்லுாரி மேடை ஏற்றியது. 'படிப்பு, வேலை, சம்பாத்தியம்' கடந்து, மனதின் விருப்பத்தை அறிந்து கொள்ளத் துாண்டிய அவரே என் குரு!' ரா.ச.தன்யா, கணினி அறிவியல்