உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: டீசல்

பற்றி எரியாத டீசல் !வடசென்னை கடற்கரையின் கச்சா எண்ணெய் குழாய் மீனவர்களின் படகு போக்குவரத்தை பாதிக்கிறது. குழாயில் இருந்து எண்ணெய் உறிஞ்சி கள்ளச்சந்தையில் விற்று, மீனவர்களுக்கு நல்லது செய்யும் வளர்ப்பு தந்தை மனோகர் வழியில் வாசு. மீனவர்களின் நலம் காக்க காவல் துறை, முதலாளி மற்றும் அரசுடன் மோதும் வாசுவுக்கு வெற்றி கிடைத்ததா? இயக்குனர் வெற்றிமாறன் தன் குரல் வழியே கதைக்களத்தை அறிமுகம் செய்து வைக்கையில் நிமிரும் முதுகுகள், அடுத்த அரை மணி நேரத்தில் தொட்டாசிணுங்கி இலையாக குறுகி விடுகின்றன; ஹரிஷ் கல்யாண், வினய், சாய்குமார் உள்ளிட்ட அனைவரும், குறுகிய நம் முதுகுகள் மீண்டும் நிமிராமல் பார்த்துக் கொள்கின்றனர்! கடத்தப்படும் கச்சா எண்ணெய் நிலத்தடி குழாயில் பதுக்கி வைக்கப்படுவதான திரைக் கதையில், கடற்கரையின் மேற்பரப்பில் செல்லும் கச்சா எண்ணெய் குழாயை நிலத்தடியில் பதித்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிட போகிறது; இந்த எளிய தீர்வை புறக்கணித்து, திரைக் கதையை நீட்டி முழக்கி இருக்கிறார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி! கடத்தல் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு கள்ளச்சந்தை மூலம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் சங்கிலி தொடர்பை விரிவாக விளக்கிய இ யக்குனருக்கு பாராட்டுகள். 'எரிபொருளில் கலப்படம், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு' மூலம் மின் வாகனங்களின் பக்கம் மக்களை திருப்பும் சர்வதேச தந்திரத்தை தொட்டுச் செல்கிறது கதை! 'எரிபொருள் அரசி யல்' பற்றிய இக்கதை அனல் வீசும் அழுத்தமான காட்சிகள், வசனங்கள் இன்றி மேலோட்டமான சமூக அக்கறை பேசும் படமாகவே தெரிகிறது. ஆக..‛சீனியர் நடிகர்களின் படம் போல ஜூனியர்கள் படம் இருக்காது என்று நம்பாதே!' - என் தீபாவளி பாடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !