மேலும் செய்திகள்
போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்...
01-Feb-2025
''செல்லப்பிராணிகள் ஜாலியாக ஓடி, விளையாடி, நீந்தி, களிக்கவும், ஏசி., அறையில் ஓய்வெடுத்து கொள்ளவும், வீட்டில் சேட்டை செய்யாமல் இருக்க பயிற்சி அளிக்கவும், பிறந்தநாள் நிகழ்வுகளை கொண்டாடவும், செல்லப்பிராணிகளுக்கான ஓர் இடம் அமைத்துள்ளோம்,''என்கிறார், சென்னையை சேர்ந்த ஸ்வாக் டெய்ல் பெட் ரிசார்ட் (Swag Tail Pet Resort) உரிமையாளர்கள் ராம்குமார் மற்றும் லாவண்யா.இவர்கள், 'செல்லமே' பக்கத்திற்காக, நம்மிடம் பகிர்ந்தவை:
நமக்கு துணையாக, நம் மன அழுத்தம் போக்க செல்லப்பிராணிகளை வளர்க்கிறோம். அவற்றை வீட்டிற்குள்ளே அடைத்து வைப்பதால், 'ஸ்ட்ரஸ்' ஆகிவிடுகின்றன. குறிப்பிட்ட இடத்திற்குள்ளே சாப்பிட்டு, துாங்கி கொண்டிருப்பதால், உடல் பருமன் அடைவதோடு, இளம் வயதிலே நோய் ஏற்பட்டு, சீக்கிரமே அவைநம்மை விட்டு பிரிய, நாமே காரணமாக இருக்க நேரிடலாம்.இதை நாங்கள் உணர்ந்தபோது, நகரின் பல இடங்களில், பெட் ரிசார்ட் தேடினோம். எங்களை போலவே பலரும், செல்லப்பிராணிகள் மகிழ்ச்சியாக இருக்க ஓர் இடம் வேண்டும் என, தேடுவதை அறிந்தோம். பலரது தேடலுக்கான அந்த இடமாக, போரூர், செட்டியார் அகரத்தில், 'ஸ்வாக் டெய்ல் பெட் ரிசார்ட்' அமைத்தோம்.இங்கே, நிறைய மரங்கள் இருப்பதால், காற்று மாசுக்கு வழியில்லை. பிளாஸ்டிக் பொருட்களை அனுமதிப்பதில்லை. ஒரே சமயத்தில் 30 பப்பிகள் தங்குவதற்கான, பிரத்யேக ஏ.சி., அறைகள் உள்ளன. தெரபி சிகிச்சைக்காகவும், பப்பிகளின் மூட்டு வலு பெறவும் நீச்சல் குளம் அமைத்துள்ளோம். 2,000 சதுர அடியில், இரு விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. சிறப்பு பயிற்சி
மூன்று பயிற்சியாளர்கள் இருப்பதால், பப்பிக்கான அடிப்படை பயிற்சிகள் முதல் கண்காட்சியில் பங்கேற்பதற்கான சிறப்பு பயிற்சிகள் வரை வழங்கப்படுகின்றன. சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்போடு, இங்கு தங்கியிருக்கும் பப்பிகளின் ஆரோக்கியம் உறுதி செய்ய, வாரத்தில் ஒருநாள் கால்நடை மருத்துவர், 'விசிட்' அடிக்கிறார்.பப்பிகளின் பிறந்தநாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கென பார்ட்டி ஹால் வசதி இருக்கிறது. வேலைக்கு செல்வோர், காலையில் கொண்டு வந்து விட்டு, மாலையில் அழைத்து செல்லலாம். இதுதவிர, அடிக்கடி செல்லப்பிராணிகளை குஷிப்படுத்த, ஈவன்ட் நடத்துகிறோம்.இப்படி, செல்லப்பிராணிகள், அதன் உரிமையாளருக்கான எல்லா சேவைகளும் இங்கிருப்பதால், ஒருமுறை வந்து விசிட் அடியுங்கள்.
01-Feb-2025