'ஜென்டில் ஜெய்ன்ட்'ங்கற நிக்நேம், கிரேட்டேன்னுக்கு தான் பொருந்தும். கிட்டத்தட்ட 70 செ.மீ., உயரம், 50 கிலோ எடையோட, ஜைஜான்ட்டிக்கா இருக்கற, ஒரு கிரேட்டேன் வளக்குறதுக்கே நிறைய மெனக்கெடணும். 30 கிரேட்டேன்ஸோட, கோவை, சூலுார்ல ஒரு கென்னல் இருக்குன்னு கேள்விப்பட்டதும் நேரில் சென்றோம்... அதோட ஓனர் ராஜ், கிரேட்டேன் மெயின்டனென்ஸ் பத்தி நம்மோடு பகிர்ந்தவை:பார்க்க ஜைஜான்டிக்கா இருக்கற கிரேட்டேன், பழகுறதுக்கு குழந்தை மாதிரி. இது, காரணமில்லாமல் குரைக்காது. ஹன்ட்டிங் ப்ரீடுங்கறதால, யாராவது சீண்டுனா சும்மாவிடாது. இதோட புட் சிஸ்டம் சரியா இருந்தா தான், ஹைட்டுக்கு ஏத்த வெயிட் மெயின்டெய்ன் பண்ண முடியும். குறிப்பா, புரோட்டீன் ரிச் புட்ஸ் தான், அதோட வளர்ச்சிக்கு நல்லது. டெய்லி மார்னிங், ஈவினிங்ல, வாக்கிங் கூட்டிட்டு போறது அவசியம். ஒரே இடத்துல கட்டிப்போட்டா அது ஸ்ட்ரெஸ் ஆகிடும்.18 மாசம் வரைக்கும், நல்லா சாப்பிட்டு வளர்ந்துடும். அதுக்கு அப்புறம் டெய்லி, ஒரு தடவை புட் கொடுத்தா போதும். இதோட ஸ்கின் பளபளப்பா இருக்குறதுக்கு, தேங்காய் எண்ணெய் அப்ளை பண்ணலாம். பிளாக், ப்ளூ, ஒயிட் வித் பிளாக்னு, நிறைய கலர்ல இருக்கற கிரேட்டேனோட, ஆயுட்காலம் அதிகபட்சமா 10 வருஷம். தன்னோட கடைசி காலம் வரைக்கும், ஓனரோட ஆர்டருக்கு கீழ்படியறதால இந்த டாக் பெட் லவ்வர்ஸோட, பேவரட் லிஸ்ட்ல இருக்கு.புதுசா கிரேட்டேன் வாங்கி வளர்க்கணும்னு ஆசைப்படுறவங்க, அது விளையாடுறதுக்கு போதுமான இடம் இருக்கான்னு பாத்துக்கணும். அதோட, டைம் ஸ்பென்ட் பண்ணணும்.பொது இடங்களுக்கு கூட்டிட்டு போறது, சோசியலா மத்தவங்க கூட பழக விட்டா போதும். ஓனர் கூட ஈஸியா அட்டாச் ஆகிடும்.சாப்பாடு குடுத்ததுக்கு அப்புறம் ஒர்க் அவுட் பண்ணக்கூடாது. இதுக்குன்னு தனியா கென்னல் அமைக்கறது தான் நல்லது. வீட்டுக்குள்ள, வழுக்கற மாதிரியான புளோர்ல, ரொம்ப நேரம் நடந்தா, கிரேட்டேனோட கால் வளைஞ்சிக்கும். மாடியில ஏறுறது, தாவுறது, குதிக்கறதுக்கு பழக்கக்கூடாது. ''கிரேட்டேன்ஸ்க்குன்னு ஸ்பெஷல் புட் தயாரிச்சு சேல்ஸ் பண்றேன். மெட்ரோ சிட்டில நடக்குற எல்லா ஷோலயும் என்னோட கிரேட்டேன்ஸ் கலந்துக்கிட்டு, மெடல் வாங்கிடும். என்னோட சின்ன பொண்ணுக்கு இரண்டு வயசுதான் ஆகுது. வீட்டுல இருக்கறதை விட, கென்னல்ல தான் அதிக நேரம் இருப்பா. அவ்ளோ பிரெண்ட்லியா நடந்துக்கும்'', என்றார் ராஜ்.