உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / இவ்வாறிருந்தால்!

இவ்வாறிருந்தால்!

அதிகளவு சாப்பிட்டும், உடல் பருமனாகவில்லை என்றாலோ, அடிக்கடி தண்ணீர் குடிப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தாலோ, பப்பிக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கலாம். ரத்த பரிசோதனையில் இதை உறுதி செய்து கொள்ளலாம். பப்பிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு,75- 132 மில்லிகிராம்/ டெசிலிட்டர் இருக்க வேண்டும். இதை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், மருத்துவரின் வழிகாட்டுதல் படி, பப்பியை உரிய சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.மனிதர்களை போலவே, பப்பிக்கும், இன்சுலின் சுரக்கும் அளவு மற்றும் தன்மையைபொறுத்து, டைப் 1 மற்றும் டைப் 2 என, நீரிழிவு பாதிப்பை வகைப்படுத்தலாம். எந்த வகையான நீரிழிவு பாதிப்பு என்பதை பொறுத்து, சிகிச்சை முறைகள் மாறுபடும்.சர்க்கரை வள்ளிகிழங்கு, திராட்சை, மாங்காய், எலுமிச்சை, பாலில் செய்யப்பட்ட இனிப்புகள், கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகளை, பாதிக்கப்பட்ட பப்பிகளுக்கு கொடுக்க கூடாது. கர்ப்ப காலங்களில், சில பெண் நாய்களுக்கு, நீரிழிவு பாதிப்பு இருக்கலாம். இது, பிரசவத்திற்கு பின் குணமாகிவிடும்.எல்லா வகை நாய்களுக்கும் நீரிழிவு பாதிப்பு ஏற்படலாம்.எனவே, பப்பியாகஇருக்கும் போதே, இதன் உணவுமுறை, பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். நீரிழிவு பாதிப்புக்கு, இன்சுலின் ஊசி செலுத்துதல், மருந்து, மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவதால், கால்நடை மருத்துவரை அணுகுவது அவசியம்.- ஆர்.சங்கர், அரசு உதவிகால்நடை மருத்துவர், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ