மேலும் செய்திகள்
தண்ணீரில் மிதக்கும்
16-May-2026
கோவையில் செல்லப்பிராணிகள் திருவிழா
16-May-2026
ஊட்டியை சேர்ந்தவர் கணேஷ் ராமலிங்கம். இவர், 'ஜெர்மன் ஸ்பிட்ஸ்' என்ற உயர்ரக நாயை வளர்த்து வருகிறார். அவர் கூறுகையில், ''பல தனியார் கம்பெனிகளுக்கு ஆலோசகராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 7 ஆண்டுகளாக செல்ல நாயை வளர்த்து வருகிறேன். அதற்கு 'டைமண்ட்' என பெயர் வைத்துள்ளேன். இதை ஒரு 'ஸ்ட்ரஸ் பஸ்டர்' என்று கூட கூறுவேன். காரணம், பணிக்கு சென்று திரும்பி வந்தவுடன், எத்தகைய மன அழுத்தம் இருந்தாலும், இதனுடன் விளையாடினால் போதும்; மனம் லேசாகும். நாம் அன்புடன் பயிற்சி அளித்தால், அனைத்து பணிகளையும் கீழ் படிதலுடன் செய்யும். நாம் உணவு வைத்து விட்டு, அதை உட்கொள்ள 'கமென்ட்' செய்யும் வரை அப்படியே நிற்கும். இதை பிரிந்து என்னால் இருக்க முடியாது; அவ்வளவு பிடிக்கும்,'' என்றார்.
16-May-2026
16-May-2026