மேலும் செய்திகள்
நீங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது!
07-Sep-2024
''செல்லப்பிராணிகளின் சேட்டைகளை ரசிப்பதும், கேமரா கண்கள் வழியே அதை பதிவு செய்வதும் அலாதியான அனுபவம். இதை பலரும் விரும்புவதால், எங்களின் பிசினஸில் தனித்துவத்தை புகுத்தும் வகையில், பெட் பிரண்ட்லி ஸ்டுடியோவாகவும் மாற்றிவிட்டோம்' என்கிறார் கோவை, 'மிஸ்டிக் ஸ்டுடியோ' உரிமையாளர் அபிநயா.செல்லப்பிராணிகளை போட்டோ எடுப்பதில் உள்ள சவால்கள் பற்றி அவர் கூறியதாவது:செல்லப்பிராணிகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் போது, சில சமயங்களில் ஒத்துழைக்காது. இதற்காகவே, மிஸ்டிக் ஸ்டுடியோவை, பெட் பிரெண்ட்லி ஸ்டுடியோவாகவும் மாற்றினோம். செல்லப்பிராணி வைத்திருப்போர், இங்கே வந்து, ரிலாக்ஸாக புகைப்படம் எடுத்து செல்லலாம். அவைகளுக்கான பிஸ்கட், ட்ரீட்ஸ் வைத்திருக்கிறோம். சிறிது நேரம் விளையாடிவிட்டு, பின்பு தான் பேட்டோ ஷூட் நடத்தப்படும்.பேமிலி போட்டோ எடுப்பதாக இருந்தால், செல்லப்பிராணியின் நிறத்திற்கு ஏற்ப, மற்றவர்களின் டிரஸ் கலர், காஸ்ட்யூம் ஆகியவற்றை முன்கூட்டியே பரிந்துரைப்போம். ஒவ்வொரு புகைப்படமும், அந்த வினாடி தரும் அற்புதத்தை அப்படியே 'ப்ரீஷ்' செய்வதால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், பசுமையான நினைவுகளாய் நிழலாடும்.பப்பி, மியாவ், பேர்ட்ஸ் என எந்த செல்லப்பிராணியாக இருந்தாலும், அவை நம்மோடு இருந்த நாட்களை, பிரேமுக்குள் பதிவு செய்வது அலாதியான அனுபவம். மனதுக்கு நெருக்கமான வேலை என்பதால், என்னோடு இணைந்து சரவணன், சுஜித் ஆகியோரும், ஸ்டுடியோ பணிகளை மேற்கொள்கின்றனர். வீட்டிற்கே நேரில் சென்றும் புகைப்படம் எடுத்து தருகிறோம்.இந்த ஐடியா எப்படி?கொரோனா சமயத்தில், வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்தோம். அப்போது தான், கோல்டன் ரெட்ரீவர் (மாயா) பப்பி வாங்கினோம். மகள் பிறந்தால் மாயா என பெயர் வைக்க திட்டமிட்டோம். குழந்தை மாதிரியே சேட்டை, குறும்புத்தனத்தோடு, அளவில்லாத அன்பை அள்ளித்தந்ததால், என் முதல் குழந்தையாக நினைத்து, பப்பிக்கு மாயா என பெயர் சூட்டினோம். இவள் வந்த பிறகு, என்னுள் நிறைய மாற்றங்களை உணர்கிறேன். கூகுளில் நான் தேடும் பல விஷயங்கள், பப்பியை பற்றியதாக தான் இருக்கும். என்னை போலவே பலரும், பப்பியின் மீது உயிரே வைத்திருப்பதை அறிந்து தான், பெட் பிரண்ட்லி ஸ்டுடியோவுக்கு பிள்ளையார் சுழி போட்டோம். இதனால், செல்லப்பிராணிகள் பற்றிய தேடல் மேலும் விரிவடைந்திருக்கிறது.
07-Sep-2024