புதுசா பேர்ட்ஸ் வளர்க்கறவங்க, எந்த ப்ரீட் வாங்கலாம்னு, கோவை, காந்திபுரம், 'அர்ச்சனா பெட் வோல்டு அண்டு அக்வாரியம்' ஓனர் பால்ராஜிடம் கேட்டபோது பகிர்ந்தவை: ஸ்மால் பேர்ட்ஸ் வெரைட்டில, பேன்சி பீஜியன், லவ் பேர்ட்ஸ், ஆப்ரிக்கன் லவ் பேர்ட்ஸ், காக்டெய்ல், ஸ்மால் கனுார், சன் கனுார், கிரிம்சன் பெல்லி கனுார் போன்றவை வீட்டிற்குள்ளே வளர்க்கலாம். கூண்டிற்குள் வளர்த்து பழக்கினால், வீட்டிற்குள் எங்கு சுற்றினாலும், மீண்டும் கூண்டை தேடி வந்தடையும். ஒரு வயசு ஆனதும் இது முட்டையிட தொடங்கும். கடைசி முட்டையிட்ட 21 நாட்களுக்கு பின், அதோட வாரிசு வந்துடும். பிறந்த குட்டி பறவையை, 21 நாளைக்கு அப்புறமா, கையில எடுத்து பீடிங் கொடுத்தா, ஓனரோட ஈஸியா அட்டாச் ஆகிடும். இதுக்குன்னு, தனியா 'பீடிங் பார்முலா புட்' கடைகள்ல கிடைக்குது. புதுசா வளர்க்க ஆசைப்படுறவங்களுக்கு, மூணு மாசமான பேர்ட் தான் பெஸ்ட். இதுக்கு பெருசா மெனக்கெட வேண்டியதில்லை.சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு, கொண்டைக்கடலை, துருவிய கேரட், பீன்ஸ் கொடுத்தா, மிச்சம் வைக்காம சாப்பிட்டுக்கும். கூண்டுக்குள்ள நல்ல தண்ணீர் எப்போதும் இருக்கணும். பேர்ட்ஸ் வளர்ப்பதற்கான அனுமதி சான்றிதழ், மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இணையதளத்தில் (www.parivesh.nic.in) விண்ணப்பிக்கணும்.