மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025
சிவானந்தா காலனியில் நடந்த ஆளுங்கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர்.அருகாமையில் இருந்த பேக்கரிக்குள் நுழைந்த சித்ரா, காளான் பப்ஸ், காபி ஆர்டர் கொடுத்தாள்.பப்ஸ் சாப்பிட ஆரம்பித்த மித்ரா, ''என்னக்கா, ஆளுங்கட்சி தரப்புல எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்; சி.எம்., குற்றச்சாட்டுக்கு இ.பி.எஸ்., ஏற்கனவே பதில் குடுத்துட்டாரே...'' என கேட்டாள்.''மித்து, கோவில் நிதியில காலேஜ் கட்டுறது சம்பந்தமா இ.பி.எஸ்., பேசுனது மட்டுமல்ல. நம்மூர்ல முதல்கட்ட பிரசாரம் நடத்துன அவரு, புலியகுளத்துல நிறைவு செஞ்சப்போ, செந்தில்பாலாஜி பெயரை சொல்லாம, கடுமையா தாக்கிப் பேசுனாரு.'டாஸ்மாக்'குல பாட்டிலுக்கு, 10 ரூபா 'எக்ஸ்ட்ரா' வாங்குறதை பத்தியும், 1,000 கோடி ரூபா முறைகேடு பத்தியும் தடாலடியா பேசுனாரு. கைத்தட்டல் அதிகமா கேட்டுச்சு.2026 தேர்தல்ல, 10க்கு 10 தொகுதிகளை தி.மு.க., கைப்பத்தும்னு செந்தில்பாலாஜி சொல்லியிருந்தாரு. அதுக்கும் பதிலடி கொடுத்த இ.பி.எஸ்., பல இடங்கள்ல ஒருமையில பேசுனது, ஆளுங்கட்சி தரப்பை உசுப்பி விட்டிருக்கு. அதனால, இ.பி.எஸ்., பேச்சை கண்டிச்சு, போராட்டம் நடத்துறாங்க...''''இ.பி.எஸ்., பிரசாரம் எப்படி இருந்துச்சுன்னு, சொல்லவே இல்லையே...''''மேட்டுப்பாளையம், காரமடை, வடவள்ளி, சாயிபாபா காலனி, புலியகுளம் ஏரியாவுல கூட்டம் நல்லா இருந்துச்சுனு'' உளவுத்துறை போலீசார் கணிச்சிருக்காங்க...''''ஆளுங்கட்சிக்கு சாதகமா, 'ரிப்போர்ட்' அனுப்புறது தானே போலீஸ்காரங்க வழக்கம்...''''இருந்தாலும், ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி நம்மூர்ல நிறையவே இருக்குதாம்; அதை அறுவடை செய்ய, அ.தி.மு.க., தரப்பு தவறிடுச்சுன்னு உளவுத்துறைக்காரங்க சொல்றாங்க. ஆளுங்கட்சி மீதான அதிருப்தியை கிளறி விட்டிருந்தா, கூட்டம் இன்னும் எக்கச்சக்கமா வந்திருக்கும்; எதிர்பார்த்த அளவுக்கு திரட்டலைன்னு, போலீஸ் தரப்புல சொல்றாங்க.முதல் ரவுண்டு பிரசாரத்திலேயே, ஆளுங்கட்சி தரப்பு மிரண்டு போயி, கண்டன ஆர்ப்பாட்டம் வரைக்கும் வந்துட்டாங்க. இதே ஸ்பீடுல போனா, 'செகண்ட் ரவுண்டு' களைகட்ட வாய்ப்பிருக்குன்னு பேசிக்கிறாங்க...'' ஸ்மார்ட் போன் பரிசு
''ஆளுங்கட்சியில, 'ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்' நடத்துறாங்களே; எந்த அளவுக்கு போயிக்கிட்டு இருக்கு...''''ஒவ்வொரு பூத்துலயும், 30 சதவீத வாக்காளர்களை, மெம்பரா சேர்க்கணும்னு கட்சி தலைமை சொல்லியிருக்கு. நம்ம டிஸ்ட்ரிக்ட்டுல, 35 சதவீதம் சேர்க்கணும்னு அறிவுறுத்தி இருக்காங்க. 10 லட்சம் வாக்காளர்களை சேர்க்க, 'டார்கெட்' வச்சிருக்காங்க. 10 நாளுக்கு மேலாகியும், எதிர்பார்த்த அளவுக்கு சேர்க்கை தீவிரமா நடக்கலை.அதனால, பரிசுத் தொகை அறிவிச்சிருக்கிறதா, உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க. 40 - 50 சதவீதத்துக்கு மேல உறுப்பினர் சேர்க்குற, பூத் பொறுப்பாளர்களுக்கு, 25 ஆயிரத்துல இருந்து, ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் பரிசு தொகை கெடைக்கும்னு, சில ஏரியாவுல சொல்லி இருக்காங்க...''''இன்னொரு ஒன்றியத்துல, அதிக மெம்பர் சேர்த்த முதல் மூன்று பூத்களை லிஸ்ட் எடுத்து, ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுக்குறாங்க. பர்ஸ்ட் எடத்துல இருக்கறவங்களுக்கு, 30 ஆயிரம் ரூபா மதிப்புள்ள போன், செக்கண்ட் எடத்துக்கு, 20 ஆயிரம், தேர்டு எடத்துக்கு, 10 ஆயிரம் ரூபா மதிப்புள்ள போன் வாங்கிக் கொடுத்திருக்காங்க... 2026 எலக்சன்ல இதெல்லாம் ஓட்டுகளா மாறுனா, உண்மையான உறுப்பினர்கள்னு சொல்லலாம்; இல்லேன்னா, போலி உறுப்பினர்கள்னு அர்த்தமாகிடும்... '' என்றபடி, காபியை உறிஞ்சினாள் சித்ரா. ஒலிக்கும் த.வெ.க., கோஷம்
''கொஞ்ச நாளாவே... நம்மூர்லயும் த.வெ.க., கோஷம் பலமா கேக்குதாமே...''''நீ சொல்றது உண்மைதான்! கார்ப்பரேஷன்ல துாய்மை பணியாளர்கள் தினக்கூலி பேச்சுவார்த்தையில, த.வெ.க., துண்டு போட்டுக்கிட்டு, ஒருத்தரு கலந்துக்கிட்டாரு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, வெள்ளானைப்பட்டியில குதிரையேற்ற போட்டி நடந்துச்சு.தி.மு.க., - எம்.பி., ராசா வந்திருந்தாரு. அவரு பேசிக்கிட்டிருந்த சமயத்துல, த,வெ.க.,காரங்க கோஷம் எழுப்பி இருக்காங்க... இதே மாதிரி, புலியகுளத்துல இ.பி.எஸ்., பிரசாரம் செஞ்சப்போவும், த.வெ.க.,வை சேர்ந்தவங்க கோஷம் எழுப்பியிருக்காங்க. தலைவர்கள் கண்டுக்காம கடந்து போயிட்டாங்களாம்,''''யார்... எது கேட்டாலும் எதுவும் சொல்லக் கூடாதுன்னு, த.வெ.க., கட்சிக்காரங்களுக்கு தலைமையில இருந்து, கறாரா சொல்லி இருக்காங்களாம்...''''ஏனாம்...''''இதுநாள் வரைக்கும்... விஜய் கட்சி 'மூவ்' எப்படி இருக்குன்னு, உளவுத்துறை மூலமா ஆளுங்கட்சி தரப்பு கண்காணிச்சிட்டு இருந்துச்சு. இப்போ, 'ரியாக்ட்' பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. விஜய்யை தனிப்பட்ட முறையில தாக்கிப் பேசுறாங்க,''''அதனால, நம்ம 'மூவ்' எப்படின்னு, மத்த கட்சிக்காரங்களுக்கு தெரியக்கூடாது. நம்ம கட்சிக்காரங்களை தவிர, மத்தவங்க யார் கேட்டாலும் எதுவும் சொல்லக் கூடாதுன்னு, உத்தரவு போட்டிருக்காங்க,''''த.வெ.க.,வுல இருந்து ஆளுங்கட்சிக்கு தாவுன லேடி, சமூக வலைதளத்துல ஏதாச்சும் ஒரு பதவி கேட்டுக்கிட்டு இருக்காங்களாமே...''''ஆமாப்பா... அந்த லேடி, த.வெ.க.,வுல எந்த பொறுப்பிலும் இல்லை. இருந்தாலும், ஆளுங்கட்சி பொறுப்பாளர்கள் கவனத்தை ஈர்த்துட்டாங்க. அவுங்களை, சென்னைக்கு அழைச்சிட்டுப் போயி, சின்னவருக்கு அறிமுகப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்தது, 'சீனியர்ஸ்'க்கு பிடிக்கலைன்னு உடன்பிறப்புகள் சொல்றாங்க...'' பழசுக்கு புதுசு
''உங்களுடன் ஸ்டாலின்னு புது ஸ்கீம் ஆரம்பிக்கிறாங்களாமே...''''அடப்போப்பா... ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கலெக்டர் ஆபீசுல மனு வாங்குறாங்க; கார்ப்பரேஷன் ஆபீசுல மனு வாங்குறாங்க; ஒவ்வொரு மாசமும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்குது... இப்படியே மனு வாங்குற லிஸ்ட் போட்டா... அனுமன் வால் மாதிரி நீண்டுக்கிட்டே போகும்.ஆனா, பிரச்னை தீர்ந்தபாடில்லை. 'உங்கள் கோரிக்கை பரிசீலனையில் இருக்கு'ன்னு பதில் வருது. இல்லேன்னா... 'உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது'ன்னு, மனுவை, ஆபீசர்களே முடிச்சு வச்சிடுறாங்க. இது தெரியாம... ஸ்கீமுக்கு புதுசு புதுசா பேர் வைக்கிறாங்கன்னு... பப்ளிக் புலம்புறாங்க...'' ஆபீசரின் 'டார்ச்சர்'
''மாவட்ட அதிகாரி ஒருத்தரோட 'டார்ச்சர்' தாங்காம, ஊராட்சி செயலர் ஒருத்தரு தற்கொலைக்கு முயற்சி செஞ்சாராமே...'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.''அதுவா... கலெக்டர் ஆபீசுல இருக்குற அந்த வசூல் ஆபீசர், மாசாமாசம் கப்பம் கட்டணும்னு, ஊராட்சி செயலர்களுக்கு அழுத்தம் கொடுக்குறாங்களாம். 'டார்ச்சர்' தாங்க முடியாம மன உளைச்சலுக்கு ஆளான ஊராட்சி செயலர் ஒருத்தர், தற்கொலை முடிவுக்கு போனதா, சீப் செகரட்டரிக்கு 'ரிப்போர்ட்' போயிருக்கு.சமீபத்துல சென்னையில நடந்த 'மீட்டிங்'ல, வசூல் ஆபீசரை பார்த்த உயரதிகாரி, 'ஒழுங்கா வேலையை மட்டும் பார்க்கணும்; இல்லேன்னா... நடக்கிறதே வேற'ன்னு.... 'லெப்ட் ரைட்' வாங்கிட்டாங்கன்னு, ஊராட்சி அலுவலர்கள் மத்தியில பரபரப்பா பேசிக்கிறாங்க...'' லஞ்ச லேடிக்கு ஆதரவு
''லஞ்சம் வாங்கிக் குவிக்கிற லேடிக்கு, ஆபீசர் 'சப்போர்ட்' பண்றாராமே...''''ஆலாங்கொம்பு பகுதியில உள்ள, வி.ஏ.ஓ., ஆபீசுக்கு, 10 வருஷத்துக்கு முன்னாடி, உதவியாளரா வேலைக்குச் சேர்ந்த அஞ்சு எழுத்து லேடியை, அவசரப் பணிக்காக, வடக்கு கோட்டாட்சியர் ஆபீசுக்கு மாத்துனாங்க. அஞ்சு வருஷமாகிடுச்சு. அவரு இன்னமும் அதே ஆபீசுல வேலை பார்த்துட்டு இருக்காங்க.சர்ட்டிபிகேட் கொடுக்கற செக்சன்ல இருக்கற அவரு, லஞ்சம் வாங்கிக் கொழிக்கிறாரு. அவரைப் பத்தி, கோட்டாட்சியர் கிட்ட, ஏற்கனவே கம்ப்ளைன்ட் போயிருக்கு. அவரோ, லஞ்சம் வாங்குற லேடிக்கு, 'சப்போர்ட்' பண்ணிட்டு இருக்காராம்...''''கோட்டாட்சியரையே... வேற ஊருக்கு 'டிரான்ஸ்பர்' செஞ்சாங்களே... இன்னும் அவரை விடுவிக்கலையா...''''ஆமாப்பா... கலெக்டர் ஆபீஸ் ஆபீசர் சப்போர்ட்டுல, இன்னமும் போஸ்ட்டிங்ல இருக்காராம்... கவர்மென்ட் ஆர்டரை ஆபீசர்ஸ் மதிக்கிறதில்லைன்னு, தலைமைச் செயலகத்துக்கு கம்ப்ளைன்ட் போனாதான் விடுவிப்பாங்கன்னு பேசிக்கிறாங்க...'' கரெப்ஷன் கார்ப்பரேஷன்
''கார்ப்பரேஷன் சப்ஜெக்ட் எதுவுமே சொல்லலையே...'' என, வம்புக்கு இழுத்தாள் மித்ரா.''கார்ப்பரேஷன்னாலே கரப்ஷன் தானே... சொத்து வரி நிர்ணயிச்சு புத்தகம் கொடுக்கற வேலையை, பில் கலெக்டர்கள் செய்றது வழக்கம். இப்போ, மண்டல உதவி வருவாய் அலுவலர்களே நேரடியா 'டீலிங்' செய்றாங்களாம்; இதுக்குன்னே ஆள் வச்சிருக்காங்களாம். முறையான ஆவணங்கள் இல்லாத கட்டடங்களுக்கு, 'அட்ஜஸ்ட்' செஞ்சுக்கிட்டு, ஆயிரக்கணக்குல லஞ்சம் வாங்கிட்டு, வரிப்புத்தகம் போட்டுக் கொடுக்குறாங்க.இது மாதிரியான முறைகேடுகளை, பில் கலெக்டர்கள் கண்டுபிடிச்சு, கேள்வி கேட்டா, 'உங்க உயரதிகாரிகள்கிட்ட பேசிக்குங்க'ன்னு, கட்டட உரிமையாளர்கள் சொல்றாங்க. அதனால, பில் கலெக்டர்கள் பலரும், வரி வசூல் வேலையே வேணாம்னு, ஒதுங்க நினைக்கிறாங்க...''''அதென்ன ரெண்டு பர்சன்டேஜ்.... அதைப்பத்தி சொல்லலையே...''''அதையேன் கேக்குறே... ஏற்கனவே 'பர்சன்டேஜ்' கொடுத்துதான் வேலையையே, கான்ட்ராக்டர்ஸ் எடுக்குறாங்க. இன்ஜினியரிங் டிபார்ட்மென்டை சேர்ந்த ஒரு லேடி ஆபீசர், ரெண்டு பர்சன்டேஜ் லஞ்சம் கொடுத்தா மட்டும்தான், பைல்ல கையெழுத்து போடுறாங்களாம். இல்லேன்னா... பைல்களை நிறுத்தி வைக்கிறாங்களாம். கான்ட்ராக்டர்களும், உதவி பொறியாளர்களும் புலம்பிட்டு இருக்காங்க...'' என்றபடி, ஆர்ப்பாட்ட செய்தி சேகரிக்க, பேக்கரியில் இருந்து சித்ரா புறப்பட்டாள்.பின்தொடர்ந்து சென்றாள் மித்ரா.
16-Jun-2025