மார்கழி மாத பஜனை ஒலித்தது. சுடச்சுட காபியைப் பருகியவாறே, மித்ரா பேசத் துவங்கினாள்.''சித்ராக்கா... வர்ற புதன்கிழமை வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம்; வியாழக்கிழமை உதயநிதி வருகைன்னு சிட்டியே பரபரப்பா இருக்கும் போல...''''ஆமாமா... கடையடைப்புக்கு தி.மு.க., தவிர கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே ஆதரவு தெரிவிச்சிருக்காங்க...''''துணை முதல்வரா மாவட்டத்துல உதயநிதியோட முதல் ஆய்வுக்கூட்டம்ங்கறதால ஆபீசர்ஸ் எல்லாம் பரபரப்பா இருக்காங்களாம்க்கா...''கட்சிக்கூட்டம் எதுவும் இல்லைன்னாலும் தி.மு.க., நிர்வாகிங்களும் உஷாரா இருக்காங்களாம்''''மித்து... கோஷ்டி கானம் பாடத் தயாரா இருக்காங்கன்னு சொல்ல வர்றியா''''இதையெல்லாம் கேக்க உதயநிதிக்கு நேரம் இருக்கிறது சந்தேகம்தாங்க்கா''பட்டெனச் சொன்னாள் மித்ரா. தந்திரமும், மந்திரமும்
''மித்து... வணிகர் அமைப்பு சார்பில ஆர்ப்பாட்டம் நடத்துனாங்கள்ல...''அதுல பேசுன நிர்வாகி ஒருத்தர், தள்ளு வண்டி, சாலையோரக் கடைகளுக்கு எந்த வரியும் இல்ல. கடை வியாபாரிகள் எல்லா வரியும் செலுத்தினாலும், நம்ம கல்லா காலியாத்தான் இருக்கு. தள்ளுவண்டிக்கடைதான் பெஸ்ட். அரசு கடனுதவிகூட ஈசியா கிடைக்குதுன்னாராம்.''இன்னொருத்தர் பேசும்போது, 'வியாபார தந்திரம் மட்டுமில்ல. ஆட்சியை மாத்தற மந்திரமும் தெரியும். ஒவ்வொரு வியாபாரியாலும் குறைஞ்சபட்சம் 500 ஓட்டையாவது திருப்பிவிட முடியும். ஆட்சியாளர்கள் கவனமா இருக்கணும்'னு விளாசினாராம்''''சித்ராக்கா... மாநகராட்சி முதல் மண்டல உதவி கமிஷனர் கனகராஜ் கோவைக்கு 'டிரான்ஸ்பர்' ஆகிட்டார். அவருக்குப் பதிலா கூடுதல் பொறுப்பைக் கவனிக்கிற அதிகாரி பெரும்பாலான நேரம் மாநகராட்சி அலுவலகத்திலயே இருக்கிறதால, மண்டல அலுவலகத்துக்கு எப்பவாவது தான் வந்து தலையைக் காட்டுறாராம். வார்டு மக்கள், தங்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிக்க முடியலையாம்''''கூடுதல் பொறுப்புன்னாலே அப்படித்தான்... மித்து''''ஆமாக்கா... மாநகராட்சி மண்டலத்துல முக்கிய பொறுப்புல ஒரு பெண்மணி இருந்தாலும், பொறுப்பைக் கவனிக்கிறது என்னவோ கணவர்தானாம்.''மொத்தமும் அவரே வாங்கிடறாரு... 'கட்டிங்' கூட தங்களுக்குக் கொடுக்கிறது இல்லைன்னு 'வெங்கடாசலபதி'ட்டயா முறையிட முடியும்னு கவுன்சிலருங்க புலம்பறாங்களாம்'' கோவில் மண்டபத்தில் அசைவ விருந்து
''மித்து... அவிநாசி பக்கத்துல இருக்கிற கோவில் மண்டபத்தில கிடா விருந்து நடத்த பக்தர் ஒருத்தர் புக் பண்ணப்போனாராம்.''கிடா விருந்துக்கு அனுமதி கிடையாதுன்னுட்டாங்களாம். ஆனா அதே நாளில் அந்த மண்டபத்தில அசைவ விருந்து நடந்துச்சாம்.''இதைத் தெரிஞ்சுக்கிட்ட அவர், எனக்கு மட்டும் ஏன் மண்டபத்தைக் கொடுக்க மறுத்தாங்கன்னு கலெக்டர்ட்ட புகார் கொடுத்திருக்காராம். சில ஹிந்து அமைப்புகளும் அசைவ விருந்துக்கு அனுமதி கொடுத்ததை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியிருக்காங்களாம். எல்லாம் 'சிவளாபுரி அம்மனுக்கே' வெளிச்சம்''சொல்லி முடித்தாள் சித்ரா.''அக்கா... மாநகரம், புற நகர் பகுதில நடக்குற திருட்டு, வழிப்பறி வழக்குகள்ல குற்றவாளிகளைப் பிடிக்கிற தனிப்படை போலீசார்,நகை, பணம்னு உடைமைகளை மீட்க குற்றவாளிகளை அழைச்சிட்டு வெளியூருக்குப் போறாங்கள்ல...''அப்போ தங்களுக்குள்ளயே போலீசார் உடைமைகளை பிரிச்சுக்குறாங்களாம்...''தனிப்படை போலீசோட நடவடிக்கையை உளவுப் பிரிவு போலீஸ்காரங்க கண்காணிச்சு உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிச்சா தான், தப்பு செய்ற போலீஸ்காரங்களுக்கு பயம் வரும்''''சரியா சொன்ன, மித்து... பல்லடத்துல மூனு பேர் கொலை வழக்கு தொடர்பாக, முக்கியமான சிலர்ட்ட விசாரிக்கப் போனப்ப, அரசியல் தலையீடு காரணமா விசாரிக்க முடியலையாம். குற்றவாளிங்களைப் பிடிங்கன்னு போராடுறவங்களே இப்படி முட்டுக்கட்டை போடறாங்கன்னு போலீசார் கோபத்துல இருக்காங்க''சித்ரா அங்கலாய்த்தாள். ஆம்புலன்ைஸ அழைக்க ஒரு காரணம் வேண்டாமா?
''சித்ராக்கா... போன வாரம், நள்ளிரவு நேரத்துல ஒருத்தருக்கு நெஞ்சுவலி, உடுமலை ஹாஸ்பிட்டலுக்குப் போகணும்னு, ஒரு கிராமத்துல இருந்து 108-க்கு அழைப்பு வந்துச்சாம்.''ஆம்புலன்ஸ் அங்க போனவுடனே அங்க நின்னுட்டிருந்த நபர், மிட்நைட்ல பஸ் இல்ல... என்னை உடுமலை ஜி.ெஹச்., முன்னாடி 'டிராப்' பண்ணிருங்கன்னு சொன்னாராம்''''டென்சனைக் காட்டிக்காம அவரை ஏத்திட்டு ஆம்புலன்ஸ் ஊழியருங்க புறப்பட்டாங்களாம். குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்ல ஆம்புலன்ைஸ நிறுத்தி, அந்த நபரை இறக்கிவிட்டுட்டாங்களாம்.''ஆம்புலன்ஸ் என்ன ஹாயா சவாரி போறதுக்குன்னு நினைச்சிட்டீங்களான்னு, போலீஸ்காரங்க அவரைக் 'கவனிச்சு' அனுப்பி வச்சாங்களாம்''சித்ராவிடம் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆடிப்போன கான்ஸ்டபிள்
''மித்து... போன வாரம் தெக்கலுார்ல டேங்கர் லாரி மீது கார் மோதுனதுல தலை துண்டிச்சு இளைஞர் ஒருத்தர் பலியாயிட்டாரு... விபத்து நடந்த இடத்தில் கூட்டத்தைக் கலைக்குமாறு எஸ்.ஐ., கூறியதைக் கேட்ட கான்ஸ்டபிள், பொதுமக்களிடம் 'சாட்சிக் கையெழுத்து போட வேண்டி வரும்'ன்னு சொல்லிட்டாராம்.''தி.மு.க., முன்னாள் மாணவரணி பொறுப்பாளர் ஒருத்தர், கான்ஸ்டபிளை கண்டபடி வசை பாடியதோடு, தொலைச்சுப்போடுவேன்னு சொல்லிட்டாராம்.''ஆடிப்போயிட்டாராம் கான்ஸ்டபிள். கான்ஸ்டபிள் சொன்னது தப்புன்னாலும் 'ஓவரா' தி.மு.க., நிர்வாகி கூவிட்டாரு... 'லோக'மே இப்படித்தான் போல''''சித்ராக்கா... தி.மு.க., மகளிரணி சார்பில உறுப்பினர் சேர்க்கை 'நாசிஅவி' நகர்ல நடந்துச்சாம். ஊர்ல இல்லாததால, துணைச்செயலாளரை 'மினிட்' நோட்டுல பதிவு செய்ய நகரச் செயலாளர் சொன்னாராம். இதை பேரூராட்சி தலைவியா இருக்கிறவங்க அனுமதிக்கலையாம். துணைச்செயலாளர் பேரூராட்சி வார்டு கவுன்சிலராவும் இருக்காரு.''அவரோட வார்டுல 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான டெண்டரையும் தலைவி நிறுத்தீட்டார்னு சொல்றாங்க... இதை தலைவிட்ட கேட்டவுடனே, 'உங்க தயவு தேவையில்லை. அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சப்போர்ட் செய்வாங்கன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லீட்டாராம். நகர தி.மு.க.,ல இதனால புகைச்சல் ஏற்பட்டிருக்காம்''மித்ரா 'உள்விவகாரத்தை' அம்பலமாக்கினாள். பெண் ஊழியர்களிடம் அத்துமீறிய அதிகாரி
''சித்ராக்கா... மாவட்ட நில அளவைத் தொழில்நுட்பப் பிரிவுக்குப் புதுசா வந்திருக்கிற அதிகாரி, பெண் ஊழியர்கள்ட்ட டபுள் மீனிங்ல பேசுறது, சீண்டல்னு அத்து மீறுறாராம்.''பொறுக்க முடியாத பெண் ஊழியர் ஒருத்தர், நில அளவை இயக்குனருக்கே புகார் அனுப்பிச்சிட்டாராம். சமூக நலத்துறை விசாரிக்கிறாங்களாம்''''மித்து... பாண்டியன் நகர், அண்ணா நகர்ல தனியார் குழந்தைகள் பள்ளி, வீட்டில் இயங்கிவருதாம். பள்ளிக்கான மின் இணைப்பு வாங்கல.''பறக்கும்படையினருக்குத் தகவல் தெரிஞ்சு, கள ஆய்வு நடத்தி, 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிச்சாங்களாம். பேச்சுவார்த்தைல 30 ஆயிரம் ரூபாயா அபராதத்தைக் குறைச்சாங்களாம்.'' இதுக்காக பெருமாநல்லுார்ல பறக்கும்படையினருக்கு தடபுடல் விருந்து நடந்துச்சாம். அபராதக் கட்டணத்தைக் குறைக்க 'பாடுபட்ட' இடைத்தரகர் அதிகாரி 10 ஆயிரம் ரூபா கமிஷன் கேட்டாராம்''''பேசாம அபராதத்தையே கட்டிடலாம் சித்ராக்கா''இருவரும் சிரித்தனர்; மார்கழி பஜனை முடிந்திருந்தது.