உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ஏத்தர் கொனார்க் இ.வி., ஸ்கூட்டர் ஒரு லட்சம் ரூபாய்க்குள் முதல் ஸ்கூட்டர்

ஏத்தர் கொனார்க் இ.வி., ஸ்கூட்டர் ஒரு லட்சம் ரூபாய்க்குள் முதல் ஸ்கூட்டர்

'ஏத்தர் எனர்ஜி' நிறுவனம், ஒரு லட்சம் ரூபாய்க்குள், 'கொனார்க்' என்ற குறைந்த விலை மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர், 'இசட்' மற்றும் 'எஸ்' என்ற இரு மாடல்களில் கிடைக்கிறது. தற்போது, 'எஸ்' மாடலில் மூன்று வகை ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்துள்ளன. எடை 129.5 கிலோ உள்ள இந்த ஸ்கூட்டரில், 2.1, 2.7, 3.5 மற்றும் 4.7 கி.வாட்.ஹார்., என நான்கு விதமான பேட்டரிகள் வந்துள்ளன. முழு சார்ஜில் 80 கி.மீ., முதல் அதிகபட்சமாக 160 கி.மீ., வரை ரேஞ்ச் கிடைக்கும் என இந்நிறுவனம் கூறுகிறது. இதன் டாப் ஸ்பீடு 70 முதல் 80 கி.மீ., வரை செல்லும் திறன் உடையது. இந்த ஸ்கூட்டரை அடிப்படை சார்ஜர் வாயிலாக, 80 சதவீதம் சார்ஜ் செய்ய 4 முதல் 6 மணி நேரம் வரை எடுக்கும். டெலிஸ்கோப்பிக் மற்றும் 100 எம்.எம்., மோனோ ஷாக் சஸ்பென்ஷன், 31 லிட்டர் பூட் ஸ்பேஸ், 4.2 அங்குல டிஸ்ப்ளே, ரிவர் பார்க் அசிஸ்ட், ஆட்டோ ஹோல்டு, டிரம் பிரேக்குகள், 14, 12 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையாக கிடைக்கின்றன. இசட் மாடல் ஸ்கூட்டரில், 7 அங்குல டிச் டிஸ்ப்ளே, ரிமோட் வசதி, ரிமோட் இல்லாமல் ஸ்டார்ட் செய்யும், பூட்டை திறக்கும் வசதி, வாகன இணைப்பு வசதிகள், 450 வாட் ஆன் போர்டு சார்ஜர், ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நான்கு நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்கூட்டர், 10 ஆண்டு அல்லது 10 லட்சம் கி.மீ., வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது. பேட்டரி - 3.5 கி.வாட்.ஹார்., பவர் - 6.3 ஹெச்.பி., டார்க் - 16 என்.எம்., எடை - 129.5 கிலோ டாப் ஸ்பீடு - 70 கி.மீ., விலை- - ரூ. 1 முதல் ரூ. 1.41 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை