மேலும் செய்திகள்
என்.எக்ஸ்., 200 ஹோண்டா 'சிட்டி அட்வெஞ்சர்' பைக்
27-Feb-2025
'டுகாட்டி' நிறுவனம், 'டெசர்ட் எக்ஸ் டிஸ்கவரி' என்ற அட்வெஞ்சர் டூரர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. விலை அடிப்படையில், இந்த பைக், டெசர்ட் எக்ஸ் 'ஸ்டாண்டர்ட் மற்றும் ரேலி' மாடல் பைக்குகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.இந்த டுகாட்டியின் டெசர்ட் எக்ஸ் பைக் அணிவகுப்பில், இன்ஜின், சஸ்பென்ஷன், சக்கரங்கள் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை. இதில், 937 சிசி, எல் - டுவின் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. குளிர்காலங்களுக்காக, ஹேண்டில் பாரில் ஹீட்டட் கிரிப், பெரிய விண்ட்ஸ்கிரீன், சென்டர் ஸ்டாண்டு, இன்ஜினை பாதுகாக்க பேஷ் பிளேட், பெட்ரோல் டேங்க் மற்றும் வாட்டர் பம்பை பாதுகாக்க புல் பார், ரேடியேட்டர் பாதுகாப்புக்கு பிரத்யேக கிரில், பயண பொருட்களை வைக்க அலுமினிய பெட்டி ஆகிய அம்சங்கள் இந்த பைக்கில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.டிசைன் பொறுத்த வரையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இந்த பைக்கில் உள்ள கிராபிக்ஸ் டிசைன், எந்த கீரல்கழுமின்றி பைக்கின் பெயிண்டை பாதுகாக்க உதவுகிறது. மேலும் இந்த பைக்கில், 21 லிட்டர் பெரிய பெட்ரோல் டேங்க் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால், 8 லிட்டர் சிறிய டேங்க் கூடுதல் அம்சமாக வழங்கப்படுகிறது. இந்த பைக்கின் விலை, அடிப்படை டெசர்ட் எக்ஸ் ஸ்டாண்டர்ட் மாடல் பைக்கை விட 3.45 லட்சம் ரூபாய் அதிகம்.
இன்ஜின் 937 சி.சி., எல் - டுவின், லிக்விட் கூல்டுபவர் 110 ஹெச்.பி.,டார்க் 92 என்.எம்.,எடை 223 கிலோமைலேஜ் 18 - 22 கி.மீ.,
27-Feb-2025