UPDATED : ஆக 27, 2025 08:14 AM | ADDED : ஆக 27, 2025 08:13 AM
ஜப்பானை சேர்ந்த 'ஹோண்டா மோட்டார்' இநிறுவனம், 28 கோடி ரூபாய் முதலீட்டில், புதுடில்லியில் 'ஹோண்டா பைனான்ஸ்' என்ற புதிய நிதி நிறுவனத்தை துவக்கி உள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய வணிகங்களில் ஒன்றான இது, உலகளவில், இந்தியா, ஜப்பான், வட அமெரிக்கா, ஐரோப்பா உட்பட 9க்கும் அதிகமான நாடுகளில் அமைந்துள்ளது.
'ஹோண்டா' நிறுவனத்தின் பைக்குகள், கார்களுக்கான கடன் வசதி மற்றும் இதர நிதி சேவைகளுக்காக, இந்த நிறுவனம் அமைக்கப் பட்டுள்ளது.தற்போது, இந்நிறுவனத்திற்கான உரிமத்தை பெற, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உரிமம் பெற்ற உடன் முழு வீச்சில் செயல்பாடுகள் துவங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கேய் யமாடா இந்நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.