உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி /  கியா சொரென்டோ 7 சீட்டர் எஸ் - .யூ.வி., 1.6 ஹைபிரிட், 2.2 டீசல் இன்ஜின் வருகை

 கியா சொரென்டோ 7 சீட்டர் எஸ் - .யூ.வி., 1.6 ஹைபிரிட், 2.2 டீசல் இன்ஜின் வருகை

'கி யா' நிறுவனம், 'சொரென்டோ' என்ற புதிய பிரீமியம் எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், 9 மாடல்கள், 6 மற்றும் 7 சீட்டரில் வந்துள்ளது. இந்த காரில், 1.6 லிட்டர், 4 - சிலிண்டர், ஸ்ட்ராங் ஹைபிரிட் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர், 4 - சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜின்கள் கிடைக்கின்றன. இரு இன்ஜின்களும், பிரண்ட் மற்றும் ஆல் வீல் டிரைவில் வருகின்றன. பெட்ரோல் இன்ஜினுக்கு, 6 - ஸ்பீட் டார்க் கன்வெர்டர், டீசல் இன்ஜினுக்கு 8 - ஸ்பீட் டி.சி.டி., என இரு ஆட்டோ கியர்பாக்ஸ்கள் கிடைக்கின்றன. நீளம் 4.8 மீ., அகலம் 1.9 மீ., வரை உள்ள இந்த காரில், கரு நிற பெரிய கிரில், டூயல் டோன் 19, அங்குல அலாய் சக்கரங்கள், 12.3 அங்குல இரு டிஸ்ப்ளே, டூயல் ஜோன் ஏ.சி., 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வென்ட்லேட்டட் முதல் மற்றும் இரண்டாம் வரிசை சீட்கள், 10 காற்று பைகள், 360 டிகிரி கேமரா, ஏ.ஐ., வாய்ஸ் அசிஸ்டன்ட், டேஷ் கேம், அடாஸ் லெவல் 2 பிளஸ் பாதுகாப்பு, பேனரோமிக் சன் ரூப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஒயர்லெஸ் போன் மற்றும் கார் இணைப்பு, சார்ஜிங் வசதிகள், 4 டிரைவ் மற்றும் 3 டெரைன் மோட்கள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இன்ஜின் 1.6 லிட்டர், ஹைபிரிட் டர்போ பெட்ரோல் 2.2 லிட்டர் டர்போ டீசல் பவர் 245 ஹெச்.பி., 193 ஹெச்.பி., டார்க் 529 என்.எம்., 42 என்.எம்., பூட் ஸ்பேஸ் 179 லிட்டர் விலை ரூ.28 லட்சம் - ரூ.40.39 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்