பி.எம்.டபுள்யூ., ஐ7 இ.வி.,க்கு கார் பதிவு செலவு இல்லை
'ஐ7' மின்சார செடான் காரை, நாடு முழுதும் ஒரே விலை வழங்க 'பி.எம்.டபுள்யூ.,' நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் எந்த மாநிலத்தில் இந்த காரை வாங்கினாலும், அதற்கான கார் பதிவு செலவுகளை இந்நிறுவனமே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.இதனால், இந்த மின்சார காரின் விலை நாடு முழுதும், 2.05 கோடி ரூபாயாக உள்ளது. கூடுதலாக, இதர வரி மற்றும் காப்பீட்டு தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்தினால் போதும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம், ஐ7 மின்சார காருக்கு, மட்டுமே பொருந்தும்.