உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் உள்நாட்டு தயாரிப்பில் மான்ஸ்டர் எஸ்.யூ.வி.,

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் உள்நாட்டு தயாரிப்பில் மான்ஸ்டர் எஸ்.யூ.வி.,

'ஜே.எல்.ஆர்.,' நிறுவனம், அதன் 'ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்' எஸ்.யூ.வி., காரின் 2025 மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் கார் என்பதால், இறக்குமதி செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல் காரை விட, 25 லட்சம் ரூபாய் குறைவு.இன்ஜின் பொறுத்தவரை, 3 லிட்டர், மைல்டு ஹைபிரிட், டர்போ பெட்ரோல் மற்றும் 3 லிட்டர், டர்போ டீசல் என இரு வகையில் வருகிறது. இந்த கார், 'எம்.எல்.ஏ., - பிளக்ஸ்' கட்டுமான தளத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இரு இன்ஜின்களுக்கும், 8 ஸ்பீடு ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் 4 - வீல் டிரைவ் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.அடாப்டிவ் எல்.இ.டி., லைட்டுகள், உயர்தர சொகுசு லெதர் சீட்டுகள், முன்புற மசாஜ் சீட்கள், இறகு வடிவ ஹெட் ரெஸ்ட் கொண்ட பின்புற சீட்டுகள், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, காற்றை சுத்தப்படுத்தும் அமைப்பு, ஒளிரும் சீட் பக்கில் மற்றும் ரேஞ்ச் ரோவர் பெயர் பொறிக்கப்பட்ட அடையாளம் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.மொத்தம் ஐந்து நிறங்களில் வரும் இந்த காருக்கு, போர்ஷே கையின் மற்றும் பி.எம்.டபுள்யூ., எக்ஸ் - 7 கார்கள் போட்டியாக உள்ளன.

விலை: ரூ.1.45 கோடி

விபரக்குறிப்பு

இன்ஜின் 3 லிட்டர், 6 சிலிண்டர், மைல்டு ஹைபிரிட், டர்போ பெட்ரோல் 3 லிட்டர், 6 சிலிண்டர், டர்போ டீசல்பவர் 400 ஹெச்.பி., 351 ஹெச்.பி.,டார்க் 550 என்.எம்., 700 என்.எம்.,டாப் ஸ்பீடு 242 கி.மீ., 234 கி.மீ.,(0 - 100 கி.மீ.,) பிக்கப் 5.5 வினாடி 5.8 வினாடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை