உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 சிலிப்பர் கிளட்ச், நேவிகேஷன் டிஸ்ப்ளே அறிமுகம்

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 சிலிப்பர் கிளட்ச், நேவிகேஷன் டிஸ்ப்ளே அறிமுகம்

'ராயல் என்பீல்டு' நிறுவனம், அதன் 'மீட்டியோர் 350' க்ரூஸர் பைக்கை மேம்படுத்தி சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 'ஜி.எஸ்.டி.,' மாற்றத்தால், இந்த பைக்கின் விலை 13,000 ரூபாய் குறைவதோடு, குறிப்பிடத்தக்க மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எல்.இ.டி., லைட்டுகள் மற்றும் இண்டிகேட்டர்கள், நேவிகேஷன் டிஸ்ப்ளே ஆகியவை அடிப்படை அம்சங்களாக தற்போது வழங்கப்படுகின்றன. இயந்திர மாற்றங்களை பொறுத்த வரை, எளிதாக கியர் மாற்ற, 'சிலிப்பர் கிளட்ச்' வந்துள்ளது.

ஏழு புதிய நிறங்களில் கிடைக்கும் இந்த பைக், அதன் சேசிஸ், இன்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கில் எந்த மாற்றங்களும் இல்லை. இரு உயர்ந்த மாடல் பைக்குகளுக்கு மட்டும், அட்ஜஸ்ட்டபில் பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்கள் வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
செப் 24, 2025 09:08

350 சிசி வாணாம். 349.9 CC வண்டி தயாரிங்க. பெரிய வித்தியாசம் இருக்காது. 40 பர்சண்ட் ஆடம்பர வரியிலிருந்து தப்பிக்கலாம். மக்களும் வாங்குவாங்க.


புதிய வீடியோ