டாடா டியாகோ இ.வி., வாழ்நாள் உத்தரவாதம், 6 காற்று பைகள், 360 கேமரா
'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 'டியாகோ இ.வி.,'மின்சார ஹேட்ச்பேக் காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இதன் அடிப்படை விலை ஒரு லட்சம் ரூபாய் குறைந்து, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் வந்துள்ளது. இந்த கார், வாடகை பேட்டரி முறையிலும் கிடைக்கிறது. இதில், 19.2, 24 கி.வாட்.ஹார்., என இரு பேட்டரிகள் தொடர்கின்றன. முழு சார்ஜில், 170 கி.மீ., - 215 கி.மீ., வரை பயணம் செய்யலாம். 24 கி.வாட்.ஹார்., பேட்டரிக்கு வாழ்நாள் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. 30 கி.வாட்., பாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி பேட்டரியை, 80 சதவீதம் சார்ஜ் செய்ய 35 நிமிடம் எடுக்கிறது. 20 நிமிட சார்ஜில், 100 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ள முடியும்.