2 சீரிஸ் கிராண்ட் கூபே பி.எம்.டபுள்யூ.,வின் முதல் 3 சிலிண்டர் இன்ஜின் கார்
'பி. எம்.டபுள்யூ.,' நிறுவனம், அதன் '2 சீரிஸ் கிராண்ட் கூபே' செடான் காரை மேம்படுத்தி, இரண்டாம் தலைமுறையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், 'பெட்ரோல்' இன்ஜினில் மட்டும் வருகிறது. '218ஐ எம் ஸ்போர்ட்', '218ஐ எம் ஸ்போர்ட் பிரோ' ஆகிய இரு மாடல்களில் வந்துள்ளது. இது, இந்தியாவில் இந்நிறுவனத்தின் முதல் 3 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் கார் ஆகும். இதில், 1.5 லிட்டர், மைல்டு ஹைபிரிட், டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது. பழைய 4 சிலிண்டர் இன்ஜினுடன் ஒப்பிடுகையில், 20 ஹெச்.பி., பவர், 50 என்.எம்., டார்க் குறைத்து, அதிக மைலேஜ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோ டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.