டொயோட்டா கிளான்ஸா 2026 3 சிலிண்டர் இன்ஜின், அடாஸ் 2 பாதுகாப்பு வருகை
'டொயோட்டா' நிறுவனம், 'கிளான்ஸா' ஹேட்ச்பேக் காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. நான்கு மாடல்களில் வரும் இந்த காரின் ஆரம்ப விலை, கடந்த ஆண்டை விட 26 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் இருந்த 1.2 லிட்டர், 4 - சிலிண்டர், கே சிரீஸ் என்.ஏ., பெட்ரோல் இன்ஜினுக்கு பதிலாக, 1.2 லிட்டர், 3 - சிலிண்டர், இசட் சீரிஸ் என்.ஏ., பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி., இன்ஜின்கள் கிடைக்கின்றன. இந்த இன்ஜின்கள், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி., கியர்பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.