டி.வி.எஸ்., அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 310 சாவியின்றி ஸ்டார்ட் செய்ய ஹைடெக் வசதி
'டி .வி.எஸ்., மோட்டார்' நிறுவனம், அதன் 'அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 310' என்ற நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர் பைக்கை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. பைக் டிசைனில், பெரிய மாற்றங்கள் இல்லை; வெளிப்புற கிராபிக்ஸ், புதிய அலாய் சக்கரங்கள், கைகளை பாதுகாக்க ஹேண்ட் கார்டு, டிரான்ஸ்பரண்ட் கிளட்ச் கவர், ஸ்வைப் இண்டிகேட்டர்கள் ஆகியவை புதிய மாற்றங்கள். இதில், பழைய 312 சி.சி., சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டாலும், இன்ஜின் இன்லெட் வடிவமைப்பு மாற்றம், பலமான போர்ஜிடு பிஸ்டன் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. இது, இன்ஜின் பவரை சீராக வழங்கவும், அதிர்வுகளை குறைக்க உதவுவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.