வோல்வோ எக்ஸ்.சி., - 90 எஸ்.யூ.வி., பாதுகாப்பில் உலகின் நம்பர் - 1 கார்
'வோல்வோ' நிறுவனம், அதன் 'எக்ஸ்.சி., - - 90' எஸ்.யூ.வி., காரை புதுப்பித்து, அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காரின், விலை 2 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது.இந்த கார், அதே 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜினில் வந்துள்ளது. செயல்திறன் அதிகரிக்கப்பட்டு, எரிவாயு செலவு குறையும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், 8 ஸ்பீட் ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் அமைப்பு வழங்கப்படுகிறது.புதிய வடிவில் பெரிய கிரில், மாற்றி அமைக்கப்பட்ட பம்பர்கள், மேம்படுத்தப்பட்ட 'சுத்தியல்' வடிவ டி.ஆர்.எல்., லைட்டுகள், மேட்ரிக்ஸ் எல்.இ.டி., ஹெட் லைட்டுகள், சீரமைக்கப்பட்ட பின்புற டெயில் லைட்டுகள் ஆகியவை வெளிப்புற மாற்றங்கள். இதன் ஏர் சஸ்பென்ஷன், நிலப்பரப்புக்கு ஏற்றவாறு கிரவுண்ட் கிளியரன்ஸை 40 எம்.எம்., ஏற்றவும், 20 எம்.எம்., குறைக்கவும் செய்யும். அதிகபட்ச கிரவுண்ட் கிளியரன்ஸ் 267 எம்.எம்.,மாக உள்ளது.உட்புறத்தில், கூகுள் மென்பொருளில் இயங்கும் 11.2 அங்குல டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, காற்று சுத்திகரிப்பு அமைப்பு, 19 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம் உட்பட பல அம்சங்கள் உள்ளன. பாதுகாப்புக்கு அடாஸ் அமைப்பு, 7 காற்றுப் பைகள் வழங்கப்படுகின்றன.
விலை: ரூ.1.03 கோடி
டீலர்: Volvo Tamilnadu - 77086 34599
விபரக்குறிப்பு
இன்ஜின் -- 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல்பவர் - 250 ஹெச்.பி.,டார்க் - 360 என்.எம்.,மைலேஜ் - 11 - 13 கி.மீ.,டாப் ஸ்பீடு - 215 கி.மீ.,